ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெறும் இரண்டு நாட்களில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்வு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரேக் சேப்பல், இந்த இரண்டு அணிகளுமே டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை அழித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் இரண்டு போட்டிகள் வெறும் இரண்டு நாட்களில் முடிவை எட்டி இருக்கின்றன. அதிலும் நான்காவது டெஸ்ட் போட்டியான பாக்ஸிங் டே போட்டி வெறும் இரண்டு நாட்களில் 36 விக்கெட் விழுந்து இருக்கின்றன.
டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது கவனத்தை செலுத்த மறுக்கின்றனர் என்று முன்னரே குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இது போன்ற இரண்டு நாட்களில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகளால்இது போன்ற இரண்டு நாட்களில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகளால் அது உண்மை என்று நிரூபணம் ஆகிறது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து கிரேக் செப்பல் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ஆடுகளத்தின் சூழ்நிலைகள் கிடையாது, ஏனென்றால் கிரிக்கெட் எப்போதுமே இயற்கையின் கருணையைச் சார்ந்து இருக்கும் ஒரு விளையாட்டு. இது முற்றிலும் பேட்ஸ்மேன்களின் எதிர்வினைகள் தான். நம்ப முடியாத பாவனைகள், முணுமுணுத்த சபதங்கள், அவர்கள் சூழ்ந்து நடந்த போது முகத்தில் தெரிந்த விகாரமான புன்னகைகள், ஏதோ ஒரு தவறான பந்து வீச்சால் தங்களுக்கு மட்டுமே சாபம் ஏற்பட்டு விட்டதாக நடந்து கொண்டார்கள்.
இதையும் படிங்க:2025ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்த அணியில் 3 இந்தியருக்கு இடம்
முதல்முறையாக ஒரு சவாலை எதிர்கொள்ளும் புதியவர்களைப் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். தொழில் முறை என்பது சம்பளத்தில் உள்ள பூஜ்யங்களால் அளவிடப்படுவதில்லை. மாறாக அணி நாடு கௌரவத்திற்கு போராடும் விருப்பத்தால் அளவிடப்படுகிறது என்பதை அணியினர் மறந்து விடுகிறார்கள். டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்தில் 148 ஆண்டுகால ஆசஸ் வரலாற்றை அவிழ்க்கும் அபாயத்தில் உள்ளனர்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.






