இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் என விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் பார்மெட்டில் அறிமுகமானதிலிருந்து சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தவராக இருக்கிறார். அதிலும் கேப்டனாக இந்திய அணியை நம்பர் ஒன் இடத்தில் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் அவருக்கு போதுமான மகிழ்ச்சியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மோசமாக விளையாடிய விராட் கோலி, அதற்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்தது அவரது ஓய்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் இவர் இந்திய அணியின் சிறப்பான வீரராக வருவார் என அப்போதே நினைத்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டேவிட் வார்னர் வாழ்த்து
இது குறித்து வார்னர் விரிவாக கூறும்போது “இந்த விளையாட்டின் லெஜன்ட் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. நாங்கள் இளமையாக இருந்த போது ஒருவருக்கொருவர் எதிரான ஆட்டத்தை எப்போதும் நான் மறக்க மாட்டேன். என் நினைவில் நிற்கக்கூடிய முக்கியமான விஷயங்களில் அதுவும் ஒன்று. இந்த ஒரு நபர் தீவிர போட்டியாளர் என்றும், சிறந்தவராக இருப்பார் என்றும் அனைவரும் போற்றும் ஒருவராக இருப்பார் எனவும் நான் அப்போதே நினைத்தேன்.
இதையும் படிங்க:2027 உலக கோப்பை வரை இல்லை.. இந்த விஷயம் எனக்கு நடக்கலனா ஒருநாள் தொடரிலும் ஓய்வு பெறுவேன் – ரோஹித் சர்மா பேட்டி
இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய நாட்டை மேலே கொண்டு செல்ல சில சிறந்த வீரர்களின் இடத்தை நீங்கள் நிரப்ப வேண்டியிருந்தது. உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட எங்கள் அனைவரிடமிருந்தும் சிறந்தவை பெற்றதற்கு நன்றி” என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி விராட் கோலி கொண்டு வரும் அதிக அளவிலான ஆற்றல் போட்டியை உற்சாகப்படுத்தும் விதம் ஆகியவை இந்திய அணியில் நிச்சயமாக மிஸ் செய்யப்படும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை