விராட் கோலி எங்கள மாதிரி.. இந்த விஷயம் பத்தி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டாரு – ஆஸி பிரெட்லீ பேட்டி

0
25

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரட்லீ விராட் கோலிக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாளை நடைபெற உள்ள முதலாவது டெஸ்ட் போட்டி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் பெரிய சரிவை சந்தித்து வருகிறார். இந்த ஆண்டில் விராட் கோலி விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 250 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விராட் கோலி பதிவு செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி இவரது பேட்டிங்கையே அதிகம் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில் அவரது பேட்டிங் சரிவு இந்திய அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரட்லீ விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி தகுந்த நேரத்தில் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவார் என்றும் கூறுகிறார்.

- Advertisement -

விராட் கோலியின் மனநிலை குறித்து பிரட்லீ

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி ஒரு ஆஸ்திரேலிய மனநிலையை கொண்டு இருக்கிறார். ஒரு போதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை கொண்டவர். எனவே தனது மனநிலையில் எந்த விதமான சலனமும் விரிசலும் ஏற்படாத வகையில் இருக்கிறார். சமீபத்தில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து நிறைய விவாதங்கள் இருக்கின்றன. ஆனால் நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. விராட் கோலி பற்றி எனக்குத் தெரியும் அவர் நிறைய அனுபவம் கொண்ட வீரர்.

இதையும் படிங்க:ஸ்டார்க் மவுசு அவ்ளோதான்.. இந்த ஒரு விஷயத்தால அதிக தொகைக்கு போக மாட்டாரு – சுனில் கவாஸ்கர் பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 90 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கலாம். ஆனால் அது கவலைப்பட வேண்டியதில்லை. அதிலிருந்து வெளியே வந்து பார்த்தால் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறந்த ரெக்கார்டு வைத்திருக்கிறார். என்று பிரட்லீ கூறி இருக்கிறார். எனவே நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இழந்த தனது பேட்டிங் ஃபார்மை மீண்டும் மீட்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -