இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக திகழ்ந்த ரோஹித் சர்மா மோசமான ஃபார்ம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி பும்ராவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று அதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோகித் சர்மா சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியை வெளிப்படுத்தியதால் அவர் மீது அதிக அளவிலான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தான் இந்த போட்டியில் இருந்து மட்டும் விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். அதனால் ஐந்தாவது போட்டியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.
இருப்பினும் அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரோஹித் சர்மா மீது அதிக அளவிலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தனது பார்ம் குறித்து மறு ஆய்வு செய்யப் போவதாக கூறி இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோஹித் சர்மா இங்கிலாந்து தொடரில் விளையாட போவதாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அவர் வீடு திரும்பியதும் தன்னை மறு ஆய்வு செய்யப் போவதாக ரோஹித் சர்மா கூறியது எனக்கு தோன்றுகிறது. முதலில் அவர் வீடு திரும்பியதும் சந்திக்கப் போவது அவரது இரண்டு மாத குழந்தையை தான். முதலில் அந்தக் குழந்தைக்கு ரோகித் சர்மா நாப்கின்களை மாற்ற வேண்டும்.
இதையும் படிங்க:அஸ்வின் மனசுல இந்த வலி இருக்கு.. காரணம் இல்லாம அவர் ஓய்வு முடிவை அறிவிக்கல – இந்திய முன்னாள் வீரர் பேட்டி
இப்போது அந்தக் குழந்தை அவரை இங்கிலாந்து சென்று விளையாட ஊக்குவிக்கக்கூடும். ஆனால் ரோஹித் சர்மா இங்கிலாந்து சென்று விளையாடுவார் என்று எனக்கு தோன்றவில்லை” என்று கூறியிருக்கிறார். ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பும்ராவின் உடல் நிலையிலும் அக்கறை கொள்ளப்படுவதால் அவர் குறிப்பிட்ட போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.