தொடர் தோல்வி வந்தாலும் பரவால்ல.. ஆனா சிஎஸ்கே நிர்வாகம் இதை மட்டும் கைவிடவே கூடாது – ஆஸி ஆரோன் பின்ச் பேட்டி

0
352

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 52 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பணிகளுக்கு இடையேயான போட்டிகள் சிஎஸ்கே 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் சிஎஸ்கே குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

10வது இடத்தில் சிஎஸ்கே

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஆண்டிலும் இல்லாத அளவு மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் சிஎஸ்கே 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியும் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இத்தகைய தோல்விக்கு காரணம் நிர்வாகம் மெகா ஆக்ஷனில் அதிரடியான வீரர்களை எடுக்க தவறினார்கள்.

மேலும் ஏற்கனவே வாங்கிய திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அனுபவ வீரர்களுக்கு கொடுத்ததன் மூலமாக சிஎஸ்கே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவர்களும் தற்போது தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் சிஎஸ்கே நிர்வாகம் இளம் வீரர்களோடு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே நிர்வாகம் இதை செய்யணும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆமாம் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் அணியின் நிலைமை குறித்து வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தற்போதைய வீரர்கள் குழு மற்றும் இளைஞர்கள் பற்றி முடிந்த வரை தகவல்களை சேகரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் பிரவிசை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் சிவம் துபேவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று யோசித்து வருகிறார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு இதை அனைத்தும் மதிப்பு மிக்க விஷயங்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:யாஸ் தயால் பேப்பரில் அதை எழுதி வச்சு செய்தார்.. இந்தியாவுலயே சில பேருதான் இருக்காங்க – தினேஷ் கார்த்திக் பாராட்டு

நான் முன்பு சொன்னது போல் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே பெரிய அணிகளை சீர்குலைக்க முயற்சி செய்யலாம். என்னை பொருத்தவரை தற்போது சிஎஸ்கே நிர்வாகம் இளைஞர்களோடு துணை நின்று அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவர்கள் இப்போது பின் வாங்க முடியாத அளவுக்கு வந்து விட்டார்கள். எனவே சிஎஸ்கே அணி தற்போது பெருமைக்காக விளையாட வேண்டும்” என்று பின்ச் கூறியிருக்கிறார். ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரெ சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் ஒன்பது மூன்று மற்றும் ஐந்து சிக்சர் என 94 ரன்கள் குடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -