2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடர் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணம் ரிஷப் பண்ட் கிடையாது என அப்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறியிருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் பல வரிசையாக கருத்துகளை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
2019 மிஞ்சிய 2021
இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் 2019 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. அந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோருமே இடம்பெற்று இருந்தார்கள். புஜாரா அதிக ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக வந்தார்.
இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் முகமது சமி, ரவீந்திர ஜடேஜா என முக்கிய வீரர்கள் பல தனிப்பட்ட காரணங்களாலும் காயத்தாலும் தொடரின் ஆரம்பத்திலும் மத்தியிலும் வெளியேறி இருந்தார்கள். ஆனாலும் இவர்களுடைய இடத்தில் இடம் பெற்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணி அசத்தலாக தொடரை கைப்பற்றியது.
ரிஷப் பண்ட் முக்கிய காரணம் கிடையாது
இந்த 2021 ஆம் ஆண்டு தொடர் குறித்து பேசி இருக்கும் டிம் பெய்ன் கூறும்போது “என் நினைவில் இருப்பது என்னவென்றால் கடந்த முறை இந்திய அணி எங்கள் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறித்து ரிஷப் பண்ட்டை அதிகம் பேசுகிறார்கள். ஆனால் அந்தத் தொடரை இந்தியாவில் முக்கிய காரணமாக இருந்தவர் புஜாரா. எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் அவருடைய உடலை குறிவைத்து தாக்கினாலும் கூட, அவர் அதை சமாளித்து எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தினார்”
இதையும் படிங்க : இங்கிலாந்து ODI.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் வெளியேற்றம்.. ஸ்டார் வீரர் மீண்டும் வருகை
“தற்பொழுது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக வித்தியாசமாக அமையப் போகிறது. பும்ராவின் தோள்களில் பெரிய பணிச்சுமை இருக்கும். ஒருவேளை அவரும் காயம் அடைந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.