நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடக்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் சாதிப்பார் என அபிஷேக் நாயர் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
தற்போது விராட் கோலி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி இருக்கிறார். அவர் ஆட்டம் இழந்த முறை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அவர் மிகவும் மெதுவாக விளையாடுவதால் ஆட்டம் இழப்பதாகவும், அவருடைய புட் வொர்க் சரியாக இல்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டம் வேண்டும்
தற்போது இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக காணப்படுகிறது. விராட் கோலி சரியாக செயல்படாவிட்டால் அவரை நீக்கவும் செய்யலாம். இந்த நிலையில் விராட் கோலி நிச்சயம் மீண்டு வருவார் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அபிஷேக் நாயர் பேசும்பொழுது “எல்லோரும் எப்போதும் கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள். விராட் கோலிக்கு கடந்த இரண்டு போட்டிகளாக அந்த அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் முடியாது என்று அர்த்தம் கிடையாது. இரண்டு பூஜ்ஜியங்கள் இருக்கிறது அதற்கு முன்பாக ஒரு ஒன்றை சேர்க்க வேண்டும். அதைச் செய்வதற்கு அவரிடம் திறமையும், மன உறுதியும் இருக்கிறது”
அந்த பேயை வெல்வார்
“விராட் கோலி தோல்விகளை வெல்லாமல் விராட் கோலி ஆக மாறவே முடியாது. இங்கிலாந்தில் ஒரு சரிவு ஏற்பட்ட பிறகு மீண்டும் அங்கே சென்று சாதித்து காட்டியவர். எனவே அவர் இதிலிருந்து வெளியில் வந்து சாதிப்பார். அவருக்கு பிரச்சனை கொடுக்கும் பேய்களை வெல்லக்கூடிய சக்தியை பெற்றிருக்கிறார். நான் நம்பி பந்தயம் கட்டக்கூடிய ஒரு வீரர் விராட் கோலி. நிச்சயம் அவர் நாளை மீண்டு வந்து விடுவார்”
இதையும் படிங்க : நானே சொல்றேன்.. விராட் கோலி கிட்ட இந்த பிரச்சனை இருக்கு.. வெளியே அனுப்பிடுவாங்க – ரவி சாஸ்திரி கவலை
“விராட் கோலி எப்பொழுதும் பந்தின் தையலை பார்ப்பவர். இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டம் இழந்த பந்தின் தையல் வெளியில் செல்வதாக தெரிந்தது. எனவே விராட் கோலி அதற்கு தயாராக இருந்தார். ஆனால் பந்து பட்டு உள்ளே வந்தது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த பந்தில் யார் விளையாடு இருந்தாலும் ஆட்டம் இழந்து இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.






