இந்திய கிரிக்கெட்

இந்தியா ஆஸி பைனல் வருவாங்க.. ஆனா அங்க 1 ரன் வித்தியாசத்தில் இது நடக்கப்போகுது – மைக்கேல் கிளார்க் கணிப்பு

இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா இடம் பெற்று இருக்கும் பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தையும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. நாளை இந்தியா நியூசிலாந்து போட்டியில் எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அந்த அணி முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் யார் யார் மோதுவார்கள்?

இந்திய அணி தன்னுடைய பிரிவில் எந்த இடத்தை பிடித்தாலும் தன்னுடைய போட்டிகளை துபாயில் மட்டுமே விளையாட போகிறது. அதே சமயத்தில் ஒரு பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி இன்னொரு பிரிவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் ஆப்பிரிக்கா அந்த அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் முதல் இடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

எனவே இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் அரையிறுதி போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளே தற்பொழுதும் தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இறுதிப்போட்டியில் இது நடக்கும்

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் என்று நினைக்கிறேன். மேலும் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த அணி தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. மேலும் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தும்”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபியில் குழப்பம்.. அரையிறுதி எங்கே என தெரியாததால் சிக்கல்.. SA,AUS என இரு அணிகள் துபாய்க்கு போகும்.. ஏன் தெரியுமா?

“ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக்கில் சதம் அடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் பந்தை மிகவும் நன்றாக அடித்தார். அவர் வழக்கம் போல அதிரடியான துவக்கத்தை தர போகிறார். மேலும் அவரே இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராகவும் இருப்பார். ஆஸ்திரேலியா அணி வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும் இந்திய அணியே வெற்றி பெறப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts