பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரண்டு நாடுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்யாமலும் போகலாம் என ஆச்சரியமான செய்தியை ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
தற்போது நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக சுழல் பந்துவீச்சு மற்றும் மிதவேக பந்து வைத்து ஆல் ரவுண்டர்கள் யாரை சேர்ப்பது என்கின்ற குழப்பங்கள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் பேட்டிங் வரிசையை ஏழு வரையில் மட்டுமே அமைப்பதற்கான கட்டாய நிலையும் காணப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தி அபார முன்னேற்றம்
இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்போது விஜய் ஹசாரே டிராபியில் கூட ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய டி20 அணிக்கு அவர் திரும்பிய பிறகு ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்”
“தற்போது வதந்தி சந்தை சூடு பிடித்திருக்கிறது. வரும் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்படி வரக்கூடிய சில செய்திகள் உண்மையாகவும் ஆகி இருக்கின்ற காரணத்தினால் இதை நம்பவும் வேண்டி இருக்கிறது. அவர் உள்ளே வந்தால் யார் வெளியே செல்வார்கள்? அது ரவீந்திர ஜடேஜாவாகத்தான் இருக்க முடியும்!”
வாஷிங்டன் சுந்தரம் இருக்கிறார்
“தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேலை இந்திய தேர்வுக்குழு விரும்பும். இதன் காரணத்தால் வருண் சக்கரவர்த்தி உள்ளே வரலாம் ரவீந்திர ஜடேஜா வெளியில் செல்லலாம். இந்த முறை நீங்கள் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சரை பார்க்கலாம்”
இதையும் படிங்க: வெறும் 29 ஓவர்.. மாஸ் காட்டிய 3 பவுலர்கள்.. பதிலடி கொடுத்த இலங்கை.. நியூசி அணி தோல்வி
“மேலும் வாஷிங்டன் சுந்தரும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் உங்களுடைய பேட்டிங் வரிசை ஏழு வரையில்தான் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் மூன்று வேகம் பந்துவீச்சாளர்கள் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறுவார்கள். இத்துடன் குல்தீப் அணியில் இருந்தால் வருண் சக்கரவர்த்திக்கு இடம் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.