ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா வீரர்களோடு சிறிய மோதலிலும் ஈடுபட்டார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பின்ச் மற்றும் சைமன் காடிச் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்கள்.
இந்திய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி சமீபகாலமாக பேட்டிங்கில் சரிவை சந்தித்து வந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் அவருக்கு பெரிய கம்பேக் கொடுக்கும் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு அடுத்த நான்கு போட்டிகளில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதலில் ஈடுபடுவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தன்னிடம் பந்தை சேதமாக்க எந்த பொருட்களும் இல்லை என்று கேமரா மற்றும் ரசிகர்கள் முன்னால் காட்டியது என்று சில சேட்டைகளிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் விராட் கோலி திரும்ப பார்முக்கு வரவே அத்தகைய செயல்களில் ஈடுபட்டார் எனவும் இதன் மூலம் அவர் தனது நற்பெயரை எடுத்துக் கொண்டார் என சில முக்கிய கருத்துக்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து முதலில் சைமன் காடிச் கூறும்போது “விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் மிகச் சிறப்பான வீரராக இருந்தார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் எந்த மாதிரியான நிலையில் இருந்தார் என்பதை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் உடல்ரீதியான மோதலில் ஈடுபட்டது. மேலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் பழைய சான்ட் பேப்பர் விஷயத்தை சுட்டி காட்டியது என்று தன் மீதான நற்பெயரை அவரே கெடுத்துக் கொண்டார்”.
இதையும் படிங்க:அங்க யாரு நல்லா ஆடுனா.? ரோஹித் எடுத்தது தப்பான முடிவு.. இனி அவர் விளையாடவே கூடாது – முகமது கைப் கருத்து
மேலும் ஆரோன் பின்ச் கூறும்போது “இது ஒரு விரக்தியின் வெளிப்பாடு என்று நான் கூறுவேன். கடந்த வாரம் சொன்னது போல அவர் தன்னை மீட்டெடுக்க இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார். விராட் கோலி உடன் மோதலில் ஈடுபடும் போதுதான் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால் இந்த தொடரில் அவர் சற்று அதிகமாகவே இதை செய்து விட்டார். எனவே ஒட்டுமொத்தமாக அவர் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்த சர்ச்சையான செயல்கள் செய்தார் ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை” என்று கூறி இருக்கிறார்.