தற்போது நடைபெற்று வரும் அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரில் முக்கியமான போட்டியில் யுஏஇ அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணியின் பிரிவில் பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் யுஏஇ அணிகள் இடம் பெற்று இருந்தன. இதில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இந்திய அணி மற்ற இரண்டு அணிகளிடமும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.இந்த நிலையில் ஜப்பான் இன்று இருந்த நிலையில், இன்று யுஏஇ அணியும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பரிதாபமாக சுருண்ட யுஏஇ
இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி எடுத்த முடிவுக்கு தகுந்தபடி அந்த அணி வீரர்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. 44 ஓவர்கள் தாக்குப்பிடித்த யுஏஇ அணி இறுதியாக 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அக்சத் ராய் 52 பந்தில் 26 ரன்கள், ராயன் கான் 48 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சில் யுதஜித் குகா 3, சேட்டன் சர்மா மற்றும் ஹர்திக் ராஜ் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். கேபி.கார்த்திகேயா மற்றும் ஆயுஸ் மத்ரே தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்திய தொடக்க வீரர்களின் அதிரடி
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஆயுஸ் மத்ரே மற்றும் 13 வயது வைபவ் சூர்யவன்சி இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 100 ரன் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற இந்த ஜோடி 16.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தது.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்க தொடர்கள்.. 3 பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு.. 4 வீரர்கள் நீக்கம்.. இந்திய அணிக்கு உதவுமா?
இந்த ஜோடியில் ஆயுஸ் மத்ரே 51 பந்தில் 67 ரன்கள், வைபவ் சூரியவன்சி 46 பந்தில் 76 ரன்கள்அதிரடியாக எடுத்தார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.






