இந்திய கிரிக்கெட்டை மாற்றிய சம்பவம்.. தோனி வெறும் அரைநாள்ல அத முடிவு செஞ்சாரு – ஷிகர் தவான் பேட்டி

0
165
Shikar

இந்திய கிரிக்கெட்டை மாற்றிய ஒரு முக்கிய சம்பவத்திற்கான முடிவை 2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் டோனி வெறும் அரை நாளில் முடிவு செய்து அறிவித்தார் என ஷிகர் தவான் தெரிவித்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவான் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் ஐசிசி போட்டிகள் என்றாலே பெரிய அளவில் சதங்களும் சாதனையை செய்யக்கூடியவருமாக ஷிகர் தவான் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் முக்கிய முடிவு

இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான துவக்க வீரர்களாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்ற பிறகு, மிக முக்கியமான துவக்க இடத்திற்கு யாரைக் கொண்டு வருவது என்கின்ற பெரிய கேள்வி இருந்து வந்தது. ஒரு பக்கத்திற்கு ஷிகர் தவான் என்று தேர்வான பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரராக 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவை கேப்டன் தோனி கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசி உள்ள ஷிகர் தவான் “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க ஜோடி யார் என்பது குறித்து போட்டிக்கு அரைநாள் இருக்கும் பொழுதுதான் முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நானும் புதியவனாக இருந்தேன். நான் என்னுடைய சொந்த உலகத்தில் இருந்து வெளியே வந்து சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த நேரத்தில் தோனி இப்படியான ஒரு முடிவை எடுத்து தொடக்க ஜோடியாக எங்களை விளையாட சொன்னார்”

- Advertisement -

பத்து வருடம் நீடிக்கும் என்று நினைக்கவில்லை

“ரோகித்தை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது என்று தோனி கூறிய பிறகு, அவருடன் இணைந்து ரசித்து விளையாட முடியும் என்று நான் நம்பினேன். நாங்கள் முதல் போட்டியில் ஜோடியாக 100 ரன்கள் தாண்டி சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். ஆனால் முதல் பத்து ஓவர்களில் நாங்கள் 30 முதல் 35 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. அப்போது பந்து நன்றாக சீன் ஆகிக் கொண்டிருந்தது. நாங்கள் அதற்கு அடுத்து பத்து வருடங்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவோம் என்று நினைக்கவில்லை”

இதையும் படிங்க : என்ன தம்பி புரூக்.. லாகூர்ல லைட் நல்லா எரியுதா?.. கேட்ச் பிராக்டிஸ் தர – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

“தற்போது ரோகித் சர்மா ஒரு கேப்டனாக மிகவும் முதிர்ச்சி அடைந்து விட்டார். எப்போது மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்? எப்போது எழுத்து பிடிக்க வேண்டும்? என்பது குறித்து அவருக்கு மிகவும் நன்றாக தெரிந்திருக்கிறது. தற்போது ஒரு நல்ல சமநிலை சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் ரோஹித் சர்மாவுக்கு இளம் வீரர்களுடன் இருக்கும் பிணைப்பு ஆச்சரியம் அளிக்கிறது. தற்பொழுது இந்திய அணி ஒரு சிறந்த சூழ்நிலையில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -