பாகிஸ்தான் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகிப் ஜாவித் ஒரு கோமாளி எனவும், அவர் இந்த பொறுப்புக்கு வர சதி செய்தார் எனவும், பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லஸ்பி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தினாலும் கூட அந்த அணி இந்த தொடர் தொடங்கிய ஆறாவது நாளிலேயே செமி பைனல் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் ஐசிசி தொடர்களில் சொந்த மண்ணிலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.
அகிப் ஜாவேத் தந்த விளக்கம்
தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அகிப் ஜாவேத் தற்போதைய தோல்விக்கு அணியின் வீரர்களை குற்றம் சாட்ட முடியாது எனவும், இதற்காக அவர்களை தான் திட்ட முடியாது எனவும், இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மாறிக்கொண்டே இருந்ததுதான் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு ஜேசன் கில்லஸ்பி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேரி கிரிஸ்டன் ஆகியோரை பயிற்சியாளராக கொண்டு வந்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தோடு திடீரென முரண்பாடுகள் ஏற்பட அடுத்த ஆறு மாதத்தில் இருவரும் பொறுப்பில் இருந்து விலகினார்கள். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக அகிப் ஜாவேத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பயிற்சியாளர் ஒரு கோமாளி
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வுக்குழு தலைவராக இருந்த அகிப் ஜாவேத் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில்தான் ஜேசன் கில்லஸ்பி கடுமையான முறையில் அவரை விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: மெக்கலம் தோத்துட்டு எப்படி ரிலாக்ஸா இருக்கீங்க?.. கோச் ஆன்டி பிளவர பார்த்து கத்துக்கோங்க – குக் விமர்சனம்
இதுகுறித்து ஜேசன் கில்லஸ்பி கூறும் பொழுது ” அகிப் ஜாவேத் தோல்விக்கு தரும் விளக்கத்தை பார்க்கும் பொழுது பெரிய கொடுமையான நகைச்சுவையாக இருக்கிறது. நானும் கேரியும் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த பொழுது, அந்த பொறுப்புக்கு தான் வர விரும்பி திரை மறைவில் அகிப் ஜாவேத் வேலைகள் செய்து கொண்டிருந்தார். உண்மையில் அவர் ஒரு கோமாளி” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






