ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம் என புஜாரா கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க அளவில் அவர் பங்களிப்பு செய்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடத்தில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை எதுவும் உருவாக்கவில்லை.
எதிர்பார்த்து தாக்கம் இல்லை
தற்போது இந்திய அணி பேட்டிங் மிகவும் சுமாராக இருக்கின்ற காரணத்தினால், தங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களில் யாரையாவது பேட்டிங் ஆல் ரவுண்டராக களம் இறக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் வரலாம்.
அதே சமயத்தில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்யக் கூடியவராக இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வினை பொருத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பேட்டிங்கில் அரை சதம் தாண்டி ரன்கள் எடுத்து பங்களிப்பு பெரிதாக செய்தது இல்லை. மேலும் இரண்டாவது டெஸ்டில் அவர் பந்துவீச்சும் தாக்கத்தை எதுவும் செலுத்தவில்லை.
அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம்
இது குறித்து இந்திய வீரர் புஜாரா பேசும்பொழுது “ஒரே ஒரு மாற்றம் மட்டுமே நிகழக் கூடும் என்று நான் நினைக்கிறேன். தற்போது பேட்டிங் சரியாக இல்லாத காரணத்தினால் அஸ்வின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் வரலாம். மேலும் ஹர்ஷித் ராணா இடத்திற்கு யாராவது வர வேண்டுமா? என்றால் என்னை பொருத்தவரையில் கூடாது என்பதுதான் பதில். நீங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்”
இதையும் படிங்க : இந்தியா WTC பைனலை மறந்துடுங்க .. அதுக்கு பதிலா இதை செய்யுங்க மதிப்பு வரும் – பாக் பசித் அலி கருத்து
“அதே சமயத்தில் அவருக்கு இரண்டாவது போட்டி சரியாக செல்லவில்லை. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் ஆதரவு தர வேண்டும். ஒரு போட்டி சுமாராக சென்றதால் நீங்கள் அவரை கைவிட முடியாது. அவர் நல்ல பந்துவீச்சாளர். மேலும் இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் பற்றி யோசித்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் வருவார்” என்று கூறியிருக்கிறார்.