சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த மூன்று விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
இதில் ஆடம் கில்கிறிஸ்ட் தன்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்திஇருக்கிறது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களுக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உண்டாக்கியவராக அவர் இருக்கிறார் என்பதுதான்.
கில்கிறிஸ்ட் உண்டாக்கிய திருப்புமுனை
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட் கால் பதிப்பதற்கு முன்பாக, விக்கெட் கீப்பர்கள் ஸ்டெம்புகளுக்கு பின்னால் சிறப்பாக இருந்தால் போதும் என்கின்ற நிலைமைதான் இருந்தது. அவர்கள் கட்டாயம் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டிய தேவை இருந்தது கிடையாது. ஆனால் இதை அப்படியே முழுதாக மாற்றி அமைத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட்தான்.
விக்கெட் கீப்பர்களும் சிறந்த முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்கின்ற சூழ்நிலையை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் உருவாக்கினார். அவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக 1996 முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் 15,461 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் விக்கெட் கீப்பராக 905 டிஸ்மிஸல்கள் செய்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டிஸ்மிசல்கள் செய்த விக்கெட் கீப்பர்களில் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இவர் இருக்கிறார்.
உலகின் சிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள்
இந்த நிலையில் மூன்று சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் யார்? என்று தேர்வு செய்த ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “முதலில் ரோட்னி மார்ஸ் இருக்கிறார். அவர்தான் என்னுடைய ஐடியல். நான் அவர் போலவே இருக்க விரும்பினேன். அடுத்து இந்தியாவின் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். அவர் கூலாக இருப்பது எனக்கு பிடிக்கும். அவர் தன்னுடைய வழியில் அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
இதற்கு அடுத்து குமார் சங்கக்கரா மிகவும் உயர்வான ஒரு இடத்தில் உயர்தரமான பேட்டிங்கை கொண்டவராக இருக்கிறார். அத்துடன் சங்கக்கரா மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்திருக்கிறார். இவர்கள் மூவரும் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள்.
இதையும் படிங்க : இந்திய அணி எழுதி வச்சுக்கோங்க.. 2025 ஜனவரி 8ஆம் தேதி அத நாங்க செஞ்சு முடிப்போம் – ஸ்டார்க் சவால்
2021 ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் ஒருநாள் முழுவதும் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து எங்களுக்கு எதிராக பேட்டிங் செய்தார்கள். இதைப் பற்றி யோசிக்கும் பொழுது நாம் ஏதோ ஒரு விசேஷ நாளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறோம் என்று உணர்கிறேன். கிரிக்கெட் களத்தில் அது எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.