உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் தொடருக்கு இணையாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் தொடர் மாறி இருக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் கூறியிருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடருக்கு இருந்த வரவேற்பு தற்பொழுது இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடருக்கு மாறி இருக்கிறது.
ஆசஸ் – பார்டர் கவாஸ்கர்
மேலும் உலக கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் உலகக் கோப்பை தொடரை விட இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு அவர்கள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் தொடர் மிகவும் கௌரவமான ஒன்றாக இருக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு இரு அணி வீரர்களும் தங்களுடைய அதிகபட்சத்தை வெளிப்படுத்தி விளையாடுவார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சு நட்சத்திரம் மிட்சல் ஸ்டார்க் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு இணையாக மாறி இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். இந்திய அணி இந்தாண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வருகிறது
ஜனவரி-8 மிட்சல் ஸ்டார்க் சவால்
இதுகுறித்து மிட்சல் ஸ்டார்க் பேசும் பொழுது “இப்போது இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடராக மாறி இருக்கின்ற காரணத்தினால் ஆசஸ் தொடருக்கு இணையாக இருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் எங்களுடைய சொந்த மண்ணில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். மேலும் இந்தியா வலுவான அணி என்பதை நாங்கள் அறிவோம்.
இதையும் படிங்க : 973 ரன் அடிச்ச கோலி.. அடுத்த வெஸ்ட் இண்டீஸ்ல செஞ்ச சம்பவத்துல மிரண்டுட்டேன்.. அதான் கிங் – விக்ரம் ரத்தோர் பேட்டி
நாங்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரண்டு அணிகளாக முன்னணியில் இருக்கிறோம். இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது வீரர்களுக்கும் இது மிகவும் உற்சாகமான ஒரு தொடராக இருக்கப் போகிறது. 2025 ஜனவரி 8-ம் தேதி நாங்கள் கடைசி போட்டியில் இருக்கும் பொழுது தொடர் எங்கள் கைகளில் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.