உண்மைய சொல்றேன்.. என் டீம்ல கோலி இருந்தா.. அவருக்கு நிச்சயம் இதை செய்திருப்பேன் – ஆஸி மைக்கேல் கிளார்க்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் போட்டியை தவிர மற்ற நான்கு போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

மோசமான நிலையில் விராட் கோலி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி அதற்குப் பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருப்பினும் அதற்கு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை அவராகவே உருவாக்கும் அளவுக்கு அந்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் அமைந்தது. இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் எனவும் ஒரு நாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துமாறு பல முன்னாள் வீரர்கள் கருத்துக்களை கூறி வந்த நிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நான் கேப்டனாக இருந்தால் விராட் கோலியை தனது அணியில் தொடர்ந்து வைத்திருப்பேன் என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனது அணிக்கு விராட் கோலி தேவை

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இது விராட் கோலி, அவரால் நாளை இரட்டை சதம் அடிக்க முடியும். அவ்வளவு சிறப்பான ஒரு வீரர் விராட் கோலி. அவர் போதும் வரை கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்றால் தோற்கக் கூடிய ஒரே அணி இந்தியாவாக மட்டுமே இருக்கும். நான் எந்த அணிக்கு கேப்டனாக இருந்தாலும் எனது அணியில் விராட் கோலி இருந்தால் அவரை நான் தொடர்ந்து ஆதரிப்பேன்.

இதையும் படிங்க:இன்று SA டி20.. 6 ஐபிஎல் அணிகள் பங்கேற்பு.. எந்த சேனலில் பார்க்கலாம்?. தொடங்கும் நேரம்.. முழு விவரம்

அவர் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அவர் எனது அணியில் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடுவேன். ஏனென்றால் அவரால் எந்த மாதிரியான சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு மகத்தான வீரராக இருக்கிறார்” என்று மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts