இந்திய கிரிக்கெட்

இந்தியா ஆஸி டெஸ்ட்.. நூற்றாண்டின் சிறந்த பிளேயிங் லெவன்.. 6 இந்திய ஜாம்பவான்கள்.. மைக்கேல் கிளார்க் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் ஒன்று இந்திய அணியும் மற்றொன்று ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த நூற்றாண்டில் இந்த இரண்டு அணிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஒருங்கிணைத்து சிறந்த பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் என்றாலே ரசிகர்களுக்கு விறுவிறுப்பும் ஆர்வமும் நிச்சயமாக தொற்றிக் கொள்ளும். ஏனென்றால் இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால் ரசிகர்களைத் தாண்டி வீரர்களுக்குமே இது ஆர்வம் மிக்க போட்டியாக கருதப்படும். இந்தியா அதன் சொந்த மண்ணில் சிறந்த அணியாகவும் ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் சிறந்த அணியாகவும் பல்வேறு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளிலும் சேர்த்து சிறந்த 11 வீரர்களை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளர்க் தேர்வு செய்திருக்கிறார். அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பாண்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

கிளார்க் தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன்

அதன் பிறகு மிடில் வரிசையில் சமகாலத்தில் சிறந்த வீரர்களா கருதப்படும் விராட் கோலி மற்றும் ஸ்மித் ஆகியோர் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பரில் இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடினால் தோனியும் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் ஆடம் கில்கிரிஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சுழற்பந்துவீச்சாளரில் ஷேன் வார்னே வேகத்தில் பும்ரா ரியான் ஹாரிஸ், கிளேன் மெக்ராத் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் 12 வது வீரராக ஜான்சன் மற்றும் ஜாகிர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அந்தந்த நாடுகளில் விளையாடும் போது இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க:இது நமக்கு வராதுனு தெரியும்ல.. அப்புறம் எதுக்கு ஒத்துக்குறீங்க.. இந்திய அணி செய்றது தப்பு – முன்னாள் தேர்வாளர் பேட்டி

கிளார்க் தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன் அணி : வீரேந்திர சேவாக், மேத்யூ ஹெய்டன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஆடம் கில்கிறிஸ்ட்/எம்எஸ் தோனி, ஷேன் வார்னே, ரியான் ஹாரிஸ், ஜஸ்பிரிட் பும்ரா, கிளென் மெக்ராத்.

12வது வீரர்: மிட்செல் ஜான்சன்/ஜாகீர் கான்

- Advertisement -
Published by

Recent Posts