இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இப்போது தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வாளருமான ஜதின் பரஞ்பே பிங்க் பால் டெஸ்ட் குறித்து இந்திய அணிக்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
பிங்க் பால் டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் நான்கு போட்டிகள் பகல் ஆட்டமாகவும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் பகல் இரவு ஆட்டமாகவும் நடைபெற இருந்தது. இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அதிகம் விளையாடாத பிங்க் பால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது.
இந்திய அணி இந்தியாவில் அதிகமாக பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் விளையாடாத நிலையில் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி ஒப்புக்கொண்டது ஏன் என்று இந்திய முன்னாள் தேர்வாளர் ஜதின் பிரஞ்பே கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய அணிக்கு முறையான பயிற்சி தேவை
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் பிங்க் பால் டெஸ்ட்டின் பெரிய ரசிகன் கிடையாது. எனவே இந்தியா பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடத்துவதை நான் ஆதரிப்பதில்லை. அதன் நிலைமை என்ன என்பது குறித்தும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் பெற வேண்டும் என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடுவது முக்கியமானது. எனவே நாம் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க:விராட் கோலி இத செய்யலனா கஷ்டம்.. தரம் குறைஞ்சிடுச்சு – 1452 விக்கெட் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பேச்சு
இளஞ்சிவப்பு பந்து ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். நாங்கள் இத்தகைய போட்டிகளை அதிகம் விளையாடுவதில்லை. பந்துவீச்சாளர்களின் கையில் அத்தகைய நேரத்தில் பந்தை பார்ப்பது எவ்வளவு கடினம் என்று ஒரு பேட்ஸ்மேன் ஆக என்னால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு நிறைய பயிற்சி வேண்டும் அதாவது இந்த பந்தில் விளையாடுவதற்கு முன்பாக குறைந்து ஐந்து முதல் ஆறு போட்டிகளில் விளையாட வேண்டும். அடிலெய்டு மைதானத்தில் இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் என்று தெரியும்” என கூறி இருக்கிறார்






