முதல் டெஸ்ட்.. இந்திய அணிக்கு ஆஸி இப்படி செய்யும்னு.. நினைத்து கூட பார்க்கல – ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

0
258

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சூழ்நிலையில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் அணுகுமுறை குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து இருக்கின்றனர்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியினரின் அபாரமான பந்து வீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் 104 ரன்கள் மட்டுமே குவித்தது.இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பந்து வீசிய மார்னஸ் லபுசேன் முதலில் பவுன்சர் பந்துகளை வீசிய நிலையில் அது கை கொடுக்காமல் போக அதற்குப் பின்னர் அரௌண்ட் தி ஸ்டம்ப் திசையில் பந்து வீசிய விதம் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஆஸ்திரேலியா அணியினர் முற்றிலும் நம்பிக்கை இழந்த வகையில் இருந்ததாகவும் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட்மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

இது போன்ற ஆஸ்திரேலியா அணியை பார்த்ததில்லை

இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறும்போது “ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் விரக்தியாக இருக்கும் நிலையில் இது போன்ற யுக்திகளை எப்போதாவது பயன்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? கிரிக்கெட் விதி புத்தகத்தில் இது போன்ற எதிர்மறையான, சட்டவிரோதமான அணுகுமுறைகள் என்னவாக கருதப்படுகின்றன? என்று கூறியிருக்கிறார். மேலும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் “ஆஸ்திரேலியா அணியிடம் இது போன்ற அணுகுமுறையை நான் பார்த்ததில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட வாங்காம.. என் போன எடுக்காத ஸ்ரேயாஸை வாங்க காரணமே இதுதான் – பஞ்சாப் ரிக்கி பாண்டிங் விளக்கம்

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கருதப்படுகிறது.

- Advertisement -