இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீல் ஸ்மித் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முக்கியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது.
கௌரவ பிரச்சனை
கடந்த இரண்டு முறையும் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி தொடரை வென்று நாடு திரும்பியது. சமீப காலத்தில் இந்திய அணியிடம் மட்டுமே ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இரண்டு முறை இந்தியாவிடம் சொந்த நாட்டில் இழந்திருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு இது கௌரவ பிரச்சினையாக மாறி இருக்கிறது. எனவே இந்த முறை எப்படியும் இந்திய அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்தி கடந்த இரண்டு முறை தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எல்லா வகையிலும் தயாராகி வருகிறது.
ஸ்மித் இதைச் செய்ய வேண்டும்
இந்த நிலையில் ஜஸ்டின் லாங்கர் பேசும் பொழுது “ஸ்மித் எங்களிடம் இருக்கக்கூடிய மிகச் சிறந்த வீரர். சிறந்த வீரர்கள் பேட்டிங் வரிசையில் எங்கு வேண்டுமானாலும் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும். இருந்தபோதிலும் கூட அவருக்கு பேட்டிங் வரிசையில் நான்காவது இடம் தான் சரியானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்.
இதையும் படிங்க : 10 விக்கெட்டில் இந்திய அணியை தோற்கடித்தோம்.. ஆனா 2 வருஷத்தில் எல்லாம் மாற காரணம் அவர்தான் – பாக் இம்ரான் கான் விமர்சனம்
பேட்டிங் வரிசையில் நான்காவது இடம் அவருக்கு சிறந்த ஒரு நிலையாக இருக்கும். ஸ்மித் பேட்டிங் வரிசையில் அந்த இடத்தில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அப்படி அவர் கீழ் வரிசைக்கு வந்தால் யாரை வழக்கமான பிளேயிங் லெவனில் ஆட வைக்காமல் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா நிர்வாகம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் கிரீன் மற்றும் மார்ஸ் என இரண்டு ஆல்ரவுண்டர்களையும் உள்ளே கொண்டு வர இப்படி செய்கிறார்கள். தங்களது பிளேயிங் லெவலில் இளைஞர்களை வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்