13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. பத்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்திலும் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கிறது.
இந்நிலையில் உலகில் இருக்கக்கூடிய அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் என மொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் அகமதாபாத் சென்று தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல தொகுப்பாளரான ஜைனப் அப்பாஸ் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்குவதற்காக இந்தியாவிற்கு வந்த இவருக்கு எதிராக வினித் ஜின்டால் என்ற வழக்கறிஞர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் ஜைனப் அப்பாஸின் ஆன்ட்டி ஹிந்து கருத்துக்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கிறார் ஜைனப் அப்பாஸ். இவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக இந்திய மக்களிடம் உருக்கமான கடிதத்தின் மூலம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்
ஜைனப் அப்பாஸ். அந்தக் கடிதத்தில் ” இந்தியாவில் இருந்து என்னை யாரும் வெளியே போக சொல்லவில்லை மேலும் நான் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படும் இல்லை. என தெரிவித்திருக்கும் அவர் இப்போது எனக்கு எந்த பாதுகாப்பு நெருக்கடி மற்றும் ஆபத்து எதுவுமில்லை என தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலைப்பட்டதால் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக விளக்கம் கொடுப்பதற்கு தனக்கு சில காலம் மற்றும் இடைவெளி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார் .
மேலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அவர்” இதற்கு முன்பு நான் பதிவிட்ட கருத்துக்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் மக்களிடம் அதற்காக மன்னிப்போம் கேட்டுக்கொள்கிறேன். அந்த கருத்துக்கள் நான் யார் என்பதை முடிவு செய்யாதே. மேலும் அவை என்னுடைய பண்புகளும் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக பகிரங்க மன்னிப்பும் வேண்டி இருக்கிறார்.
— zainab abbas (@ZAbbasOfficial) October 12, 2023
அதுபோன்ற கருத்துக்களுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என தெரிவித்த அவர் என்னுடைய அந்த கருத்துக்கள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கடிதமான கடந்த சில நாட்களில் தன்னுடன் இருந்து தனக்கு ஆதரவு தெரிவித்த நண்பர்களுக்கு நன்றியையும் பகிர்ந்து இருக்கிறார்.






