தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று நிறுத்தப்பட்டிருக்கும் பிஎஸ்எல் தொடரில் விளையாடிய இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் பாபர் அசாம் குறித்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தின் காரணமாக முதலில் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் தொடர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரும் நிறுத்தப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் ஆர்.சி.பி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் மூலம் மீண்டும் துவங்குகிறது.
சிறப்பான சீசனில் சாம் பில்லிங்ஸ்
இந்த ஆண்டு பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 தொடரில் சாம் பில்லிங்ஸ் லாகூர் க்லாண்டர்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் இந்த சீசனில் 9 போட்டிகளில் மொத்தம் 161 ரன்கள் எடுத்து இருக்கிறார். மிடில் வரிசையில் விளையாடும் அவர் இந்த ரண்களை 185 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததின் காரணமாக அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து புள்ளி பட்டியலில் மேலே வைத்திருக்கிறார்.
மேலும் இந்த ஆண்டு பிஎஸ்எல் சீசனில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 19 பந்துகளில் அரை சதம் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இந்த சீசனில் இதுவே குறைந்த பந்தில் அடிக்கப்பட்ட அரை சதமாக பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாபர் பற்றிய சர்ச்சை பதிவு
மேலும் இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் பெசாவர் சல்மி அணிக்காக விளையாடும் பாபர் அசாம் 47 பந்தில் அரை சதம் அடித்திருந்தார். இதுவே இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் மெதுவான அரை சதமாக பதிவாகியது. இதைத் தொடர்ந்து வேகமான அரை சதம் மற்றும் மெதுவான அரைசதம் என தங்கள் இருவர் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் சாம் பில்லிங்ஸ் பதிவிட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் விளையாடிவிட்டு பாபர் அசாமை வம்புக்கு இழுத்திருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க : டெல்லி ஒப்பந்தம் செய்த உடன்.. பாகிஸ்தானுடன் ஆட பறந்த முஸ்தஃபிஸூர்.. இடையில் என்ன நடந்தது?
அதே சமயத்தில் பாபர் அசாம் இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் பெசாவர் சல்மி அணிக்காக 8 போட்டிகளில் 178 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 109 என மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக சாம் பில்லிங்ஸ் அவரை கலாய்த்து வம்புக்கு இழுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






