19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன .
இந்த சூழ்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஃபாப் டூப்ளஸிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் இந்த முறை போதிய வீரர்களை ஏலம் எடுத்து வலுவான நிலையில் களமிறங்கவுள்ளது. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும் நிலையில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் இந்த முறை வலுவாக தயாராகி உள்ளன.
இந்த சூழ்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீரருமான ரிஷப் பண்ட், நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாவார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பிளஸ்சிஸ் கூறியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் பெரிதாக விளையாடாத காரணத்தால் இந்த முறை அவர் மிகப்பெரிய அழுத்தம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அவர் கூறும் போது “என்னைப் பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும் நபர் என்று என்னை கேட்டால் பண்ட்டைக் குறிப்பிடுவேன். நாம் எப்போதும் விலை குறித்து அழுத்தம் பற்றி பேசுகிறோம். ஆனால் சில வீரர்கள் பெரிய விலை என்றாலும் அழுத்தத்தின் மத்தியில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் பலர் அதற்கு தகுந்தவாறு விளையாடாமல் அழுத்ததிற்கு உள்ளாகிறார்கள்.
கடந்த சீசனில் அவர் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் விளையாடவில்லை. இந்த சீசனில் அவர் விளையாட ஆரம்பிக்கும்போது அவர் மீது பெரிய அளவில் அழுத்தம் இருக்கும். ஒரு கேப்டனாக அவர் எப்படி செயல்பட போகிறார் பேட்டிங் அதிகம் உள்ள அணியோடு அவர் பந்துவீச்சில் எப்படி தங்கள் அணியை செயல்பட வைக்கப் போகிறார் என்பது குறித்த விவாதங்கள் இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.






