நடப்பு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் பாகிஸ்தான் அணிக்கு டபிள்யூடிசி வரலாற்றில் முதல் முறையாக சோகமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு விளையாட வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்து தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
கேள்விக்குறியாகும் பாகிஸ்தானின் ஸ்பெஷல் திட்டம்
பாகிஸ்தான் அணி தொடர்ந்து உள்நாட்டில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சு, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களை அமைப்பதை கைவிட்டு, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது.
இந்த நிலையில் இதே திட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் கொண்டு வந்தது. எதிர்பார்த்தபடியே முதல் டெஸ்ட் போட்டியை வென்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று தொடரை சமன் செய்ய வழி விட்டது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அந்த அணிக்கு முதல் முறையாக ஒரு சோகமும் நடைபெற்றிருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு நடந்த சோகம்
தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்த காரணத்தினால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் கடைசி இடத்திற்கு செல்ல வேண்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் தொடர்.. இலங்கை அணி அறிவிப்பு.. ஸ்டார் வீரர் விலகல்.. 2 வீரர்கள் மறுவருகை
நடந்து முடிந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளிலும் ஐந்தாவது மற்றும் ஏழாவது இடத்தை பாகிஸ்தான் அணி பிடித்திருந்தது. அதே சமயத்தில் தொடர்ந்து இரண்டு முறையும் பங்களாதேஷ அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருந்தது. தற்போது முதல் முறையாக பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் சோகமான நிகழ்வு நடந்திருக்கிறது!