ஆஸி டெஸ்ட் தொடர்.. இலங்கை அணி அறிவிப்பு.. ஸ்டார் வீரர் விலகல்.. 2 வீரர்கள் மறுவருகை

0
244
Srilanka

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இலங்கை அணிக்கு பின்னடைவாக நட்சத்திர பேட்ஸ்மேன் காயத்தின் காரணமாக ரூல்டு அவுட் ஆகியிருக்கிறார்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி எந்தவித தாக்கத்தையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் செலுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மீண்டு வந்த இரண்டு வீரர்கள்

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு தனஞ்செய டி சில்வா கேப்டனாக தொடர்கிறார். இவரும் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் கமிந்து மெண்டிஸ் இருவரும் காயத்திலிருந்து மீண்டு வந்து அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கை அணியின் அனுபவ வீரர்களான தினேஷ் சண்டிமல் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர்ந்து வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். மேலும் புதிய வீரராக சோனல் தினுஷா அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. இரண்டாவது போட்டி பிப்ரவரி பத்தாம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன.

- Advertisement -

நட்சத்திர வீரர் ரூல்டு அவுட்

மேலும் இந்த தொடரில் இலங்கை அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா இடுப்பு பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் சரியாகாத நிலையில் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்களில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில் இதனால்தான் பேர் கொடுக்கல.. இங்கிலாந்தின் அடுத்த கில்கிறிஸ்ட் ஜேமி ஸ்மித் பேட்டி

இலங்கை டெஸ்ட் அணி : தனஞ்சய டி சில்வா (கே), திமுத் கருணாரத்ன, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சோனல் தினுஷா, பிரபாத் ஜயசூரிய, ஜெஃப்ரி வான்டர்சே, நிஷான் பெரிஸ், அசிதா பெர்னாடோ, விஷ்வா பெர்னாடோ, லகிரு குமாரா மற்றும் மிலன் ரத்நாயக்க.

காத்திருப்பு வீரர்கள்: இசுரு உதாரா மற்றும் சோனல் தினுஷா.

- Advertisement -