92 வருடம்.. முதல் முறையாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு மாறிய வரலாறு.. ரோகித் சர்மா முடிவில் கிரிக்கெட் வல்லுனர்கள் குழப்பம்

0
29
Rohit

இந்தியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் தவறான முடிவெடுத்து சிக்கிக் கொண்டிருக்கிறது.

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வானம் மேகமூட்டமாக வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்த போதிலும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது தற்பொழுது பெரிய விமர்சனமாக மாறி வருகிறது.

- Advertisement -

சொன்னதை செய்த நியூசிலாந்து

இந்த போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பெங்களூரில் வானம் மேகமூட்டமாக இருப்பதால் தங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்துவார்கள் என்று கூறியிருந்தார். இன்று அவர்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் வந்தார்கள். ஆனால் இந்திய அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 2, ஜெய்ஸ்வால் 13, விராட் கோலி 0 சர்ப்ராஸ் கான் 0, கேஎல்.ராகுல் 0 மற்றும் ரவீந்திர ஜடேஜா 0 என அடுத்தடுத்து வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள். இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக வெறும் 34 ரன்களுக்கு முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

- Advertisement -

92 வருட வரலாற்றில் முதல் முறை

இந்திய அணியின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தங்களது சொந்த மண்ணில் முதல் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் முதல் முறையாக டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இதுவரையில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இப்படி இதற்கு முன்னாள் நடந்தது கிடையாது.

இதையும் படிங்க : 80 ரன் 8 விக்கெட்.. மொத்தமாக சரிந்த இங்கிலாந்து அணி.. படம் காட்டிய பாகிஸ்தான்.. முதல் டெஸ்டில் முன்னிலை

பெங்களூர் மைதானத்தின் சூழ்நிலை வேதபந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும் இந்திய அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதும், வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் மீது தற்பொழுது பெரிய விமர்சனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது

- Advertisement -