80 ரன் 8 விக்கெட்.. மொத்தமாக சரிந்த இங்கிலாந்து அணி.. படம் காட்டிய பாகிஸ்தான்.. முதல் டெஸ்டில் முன்னிலை

0
153
Pakistan

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடைசி 80 ரன்களுக்கு 8 விக்கெட் கொடுத்து இங்கிலாந்து அணி தடுமாறி ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் தேர்வு குழுவின் அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் அதிரடியால் வெளியே சென்ற பாபர் அசாமுக்கு பதிலாக வந்த அறிமுக வீரர் கம்ரன் குலாம் 244 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 366 ரன்கள் எடுத்தது. ஜாக் லீச் நான்கு விக்கெட் கைப்பற்றினால்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 129 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். நேற்று இரண்டாவது நாளில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

கடைசி 80 ரன்னுக்கு 8 விக்கெட்

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணி மேற்கொண்டு நான்கு விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் இழந்தது. இன்று மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 80 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 8 வருஷம்.. 116 இன்னிங்ஸ்.. விராட் கோலிக்கு நடந்தது சரியா.. கம்பீர் தவறான முடிவெடுக்கிறாரா?

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஆப் ஸ்பின் பந்துவீச்சாளர் சர்ஜித் கான் அபாரமாக பந்து வீசி 26.2 ஓவரில் 1 மெய்டன் உடன் 111 ரங்கல் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். இவருடன் இணைந்து பந்து வீசிய இடது கை சுழல் பந்துவீச்சாளர் நோமன் அலி 3 விக்கெட் வீழ்த்தினார். தற்போது பாகிஸ்தான அணி முதல் இன்னிங்ஸில் 75 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறது.

- Advertisement -