இன்று ராஜஸ்தான் ராயல் சாணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வரலாற்றில் முதல்முறையாக இரண்டு சோகமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு முதல் முறை விளையாடுகிறார் என்பதால் இந்த போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த சிஎஸ்கே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் கிளீன் போல்ட் முறையில் 7 பந்தில் 6 ரன்கள் எடுத்து பர்கர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ருதுராஜ் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார்.
இதுவரையிலான சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் போல்டு அவுட் முறையில் ஒரே போட்டியில் ஆட்டம் இழந்தது கிடையாது. தற்போது இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆயுஸ் மத்ரே ரன் ஏதும் எடுக்காமல் பர்கர் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். இதைத்தொடர்ந்து மேத்யூ ஷார்ட் 7 பந்தில் 2 ரன் எடுத்து சந்திப் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணி பவர் பிளேவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க : சிஎஸ்கே வேற லெவல் பிளேயிங் XI திட்டம்.. பிளம்மிங்கின் மாஸ்டர் மூவ்.. எக்ஸ்ட்ரா பவுலருக்கு ஸ்கெட்ச்
மேலும் சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி முதல்முறையாக ஒரு போட்டியில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு மோசமாக விளையாடிய சிஎஸ்கே அணிக்கு புதிய திறமையான வீரர்கள் வந்தும் அதே நிலை தொடர்வது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.