இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை சோகம்.. 13 வருடம் கெத்து காட்டும் கோலி கேப்டன்சி.. என்ன தவறு நடக்கிறது?

0
468
Smith

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆறாவது விக்கெட் இந்திய அணிக்கு எதிராக பிரமாண்ட சாதனையை படைத்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் கில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 84 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

புரூக் – ஸ்மித் அதிரடி

இந்த நிலையில் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புரூக் மற்றும் நேத்து இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இருவரும் சதத்தை அடித்தது மட்டும் அல்லாமல் 150 ரன்களையும் தாண்டினார்கள். மேலும் இந்த ஜோடி தற்போது 293 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் சுருட்டி மிகப்பெரிய முன்னிலையுடன் இந்திய அணி விளையாடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டது. தற்போது இந்த போட்டி டிராவை நோக்கி செல்வதற்கும், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பினால் தோல்வி அடைவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிரம்மாண்ட சாதனை

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக இதுவரையில் எந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 150 ரன்கள் தாண்டி எடுத்ததில்லை. தற்போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் 150 ரன்கள் தாண்டி எடுத்து வரலாற்று சாதனையை முதல் முறையாக படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 470 ரன் கையில வச்சிக்கிட்டு.. இதுதான் கேப்டன்சி பண்ற லட்சணமா? – கில் பற்றி ரவி சாஸ்திரி விமர்சனம்

மேலும் 2012 ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன் ஆனதிலிருந்து மற்ற இந்திய கேப்டன்கள் தலைமையில் 64 போட்டிகளில் 7 முறை எதிரணி 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு எதிராக அமைந்திருக்கிறது. அதுவே விராட் கோலியின் தலைமையில் 68 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே எதிரணி 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. விராட் கோலி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் சென்றதுதான் இந்த வித்தியாசத்திற்கு காரணம். ஆனால் கம்பீர் தற்காப்புடன் செல்வதால் இந்திய அணியால் தப்பிக்க முடிவதில்லை.

- Advertisement -