“ஸ்டெம்புகளை பறக்க விட்டது ஜாலியாக இருந்தது!” – எப்படி விக்கெட் எடுக்கப்பட்டது என்று உமேஷ் யாதவ் மாஸ் பேட்டி!

0
192
Umesh

2023 பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை வகுத்து வந்தது!

இந்த நிலையில் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் 109 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய நேற்று நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 47 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை அஸ்வினும் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவும் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக வேகபந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி ஸ்டம்புகளை பறக்க விட்டு அசத்தி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆட்டம் நடந்தது. இதை எடுத்து விளையாடிய இந்திய அணி 163 ரன்களுக்கு சுருண்டு 75 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது.

தனது பந்துவீச்சு குறித்து தற்போது பேசியுள்ள உமேஷ் யாதவ் ” சுழற் பந்து வீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் இதுபோன்று விக்கட்டுகளை பெறுவது ஒரு திருப்திகரமான உணர்வு. மேலும் ஆடுகளத்தில் பவுன்ஸ் வேகம் இல்லாத பொழுது பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகள் பறக்க விட்டு வெளியேற்றுவது மிகமிக நேர்மறையான உணர்வு. இன்று பந்தை பிட்ச் செய்த பிறகு கொஞ்சம் சீம் ஆவதை உணர்ந்தோம். இதனால் நான் ஸ்கிராம்பல் சீமில் கொஞ்சம் பந்து வீச முயற்சி செய்தேன். இதனால் ஸ்விங் கிடைக்காமல் போனாலும் சீம் கிடைக்கும். நான் ஒரு குறிப்பிட்ட லென்தில் பந்தை வீச அது ஸ்கிட் ஆகி சென்றது. அதனால் நான் அந்த நேரத்தில் ஆப் ஸ்டம்பை அடிக்க முயற்சி செய்தேன்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய உமேஷ் யாதவ்
” நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளராக இந்திய துணை கண்டத்தில் சிறப்பாக செயல்படுவது அரிதாகவே நிகழும். ஏனென்றால் இங்கு பெரும்பாலும் சுழற் பந்து வீச்சுக்கான ஆடுகளங்களே இருக்கும். எனக்கு இந்த ஆட்டத்தில் ஒரு ஸ்பெல் கிடைத்தால் விக்கெட் டூ விக்கெட் வீச வேண்டும் என்று நினைத்தேன். அணிக்கு உதவும் என்பதால் நான் ஒன்று இரண்டு விக்கட்டுகளை எடுக்க விரும்பினேன். நானும் சிராஜூம் இது குறித்து அதிகம் விவாதித்தோம். நாங்கள் அணிக்காக ஒன்று இரண்டு விக்கட்டுகள் எடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் டெக்கில் அடித்து வீச வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் துணை கண்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இதனால் என் உடலும் மூளையும் இதற்குப் பழகி இருக்கிறது. எனக்கு எப்படியான விக்கெட் கிடைத்தாலும் நான் நேர்மறையாகவே இருப்பேன். நான் எப்பொழுதும் ஒன்று இரண்டு விக்கட்டுகளை பெற வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் அதைத்தான் அணி நிர்வாகமும் விரும்புகிறது” என்று கூறியுள்ளார்!