17 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை வீசப்பட்டுள்ள 5 அதிவேக பந்துகள்.. முதல் இடத்தில் ஆஸி வீரர்

0
1368
Fastest Ball in IPL History

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு என்பது எப்போதுமே ரசிகர்களைக் கவரக் கூடிய வகையில் அமைந்திருக்கும். வெள்ளைக் கோட்டின் அருகில் இருந்து வேகமாக ஓடி வந்து ஸ்டம்புகளை நோக்கி வீசப்படும் பந்துகளுக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு.

அப்படி தனது வேகப்பந்து வீச்சின் மூலம் பிரபலம் அடைந்த வீரர்கள் ஏராளம். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டேல் ஸ்டைன் மார்னி மார்கல் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரட்லி மிச்சல் ஜான்சன், ஸ்டார்க் என்று நட்சத்திர வீரர்களை குறிப்பிட்டு சொல்லலாம். இவர்களது பந்துவீச்சுக்கு பேட்ஸ்மேன்களைப் போலவே உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து அதிவேக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்கள் குறித்து காண்போம்

- Advertisement -

5.மயங்க் யாதவ்: டெல்லியைச் சேர்ந்த அதிவேகபந்துவீச்சாளர் ஆன மயங்க் யாதவ் தனது அறிமுக ஐபிஎல் சீசனை லக்னோ அணியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்றார். அப்போட்டியில் 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். 21 வயதான இளம் வீரர் இந்திய அணியில் முக்கிய வீரராக எதிர்காலத்தில் இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

4.அன்ரிச் நோர்ட்ஜே: தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து பேச்சாளரான இவர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இவர் 156.2 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசி இருக்கிறார். இதுவே தற்போது ஐபிஎல்லில் அதிவேகப்பந்து வீச்சில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.

3.உம்ரான் மாலிக்: 24 வயதான ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இந்திய அதிவேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2022ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 157 கிலோ மீட்டர் வேகத்தில் தனது அதிவேக பந்துவீச்சினை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவே தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2.பெர்குசன்: நியூசிலாந்து நாட்டு கிரிக்கெட்டரான லாக்கி பெர்குசன் இவர் 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 157.3 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தினை வீசி தனது அதிவேக பந்துவீசினை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐபிஎல்லில் தற்போது இவர் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் நெட் பவுலர்களாக பங்கேற்றுள்ள 2 முன்னாள் ஆர்சிபி வீரர்கள்

1.ஷான் டெயிட்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஷான் டெயிட். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 2017ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 157.71 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தினை வீசி தனது அதிவேக பந்து வீச்சினை அப்போதே பதிவு செய்தார். ஏழு வருடங்கள் ஆகியும் இவரது அதிவேகப் பந்துவீச்சினை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.