ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் முதல் செஞ்சுரி அடித்த வீரர்கள்

0
2462
Manish Pandey IPL

2008ஆம் ஆண்டு ஐபிஎல் லீக் தொடர் பிரம்மாண்டமாக ஆரம்பமானது. முதல் ஐபிஎல் லீக் தொடரில் மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்றன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என எட்டு அணிகள் களம் இறங்கியது.

ஐபிஎல் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு காலம் ஒரு போட்டியில் ஒரு வீரர் 100 ரன்கள் குவிப்பது சாத்தியப்படாத விஷயமாகும். அதிலும் அந்த கால நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரர் நிலையாக விளையாடி 100 ரன்கள் குவிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அப்படி இருந்தும் ஒரு சில வீரர்கள் தங்களது அணிக்காக செஞ்சுரி அடித்து இருக்கின்றனர். அப்படி ஒவ்வொரு அணியிலும் முதல் செஞ்சுரி அடித்த வீரர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

யூசப் பதான் – ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய வீரராக விளங்கிய வீரர்களுள் ஒருவர் யூசப் பதான் அந்த தொடரில் மிக அற்புதமாக விளையாடினார். அதேபோல 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிக அற்புதமாக விளையாடி வந்தார்.

குறிப்பாக 2010ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். மும்பை அணியில் முதலில் விளையாடி 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இதன் காரணமாக யூசப் பதான் அடித்த சதம் வீண் போனது குறிப்பிடத்தக்கது.

ஜெயசூர்யா மும்பை இந்தியன்ஸ்

ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஜெயசூர்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆரம்ப காலகட்டங்களில் விளையாடினார் அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஜெயசூர்யா மும்பை அணிக்காக முதல் சதத்தை குவித்தார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் குவித்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 14வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜெயசூர்யா 48 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு காரணமாக இதில் 11 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

முன்பு கூறியதை பொய்யாக்கும் வண்ணம் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே பெங்களூரு அணிக்கு எதிராக 158 ரன்கள் அடித்து அசத்தினார் பிரண்டன் மெக்கல்லம். பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்து 158 ரன்கள் பிரண்டன் மெக்கல்லம் வெறும் 73 பந்துகளில் குவித்தார்.அதில் 10 பவுண்டரிகளும் 13 சிக்சரும் அடங்கும். இவரது ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. போட்டியின் இறுதியில் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ்

முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்த நாளே இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சதத்தை அடித்தார்.

முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 240 ரன்கள் குவித்தது.அதில் மைக்கேல் ஹசி ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 116 ரன்கள் குவித்து இருந்தார். இதில் 9 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்ட முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

ஷான் மார்ஷ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு கேப்பை ஷான் மார்ஷ் கைப்பற்றினார் என்பது பலருக்கும் தெரியாது. அந்த ஆண்டு முழுவதும் பஞ்சாப் அணிக்காக மிக சிறப்பாக விளையாடினார்.

அதில் ஒரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 69 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இவரது ஆட்டம் காரணமாக 20 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 221 ரன்கள் குவித்தது. மேலும் ஆட்ட முடிவில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை முன் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டேவிட் வார்னர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிக சிறப்பாக டேவிட் வார்னர் ஒவ்வொரு வருடமும் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்து விளையாட தொடங்கினார். அந்த வருடம் முதல் சென்ற வருடம் வரையில் ஒவ்வொரு வருடமும் ஹைதராபாத் அணிக்காக 500 ரன்களுக்கு மேல் தனியாளாக குவித்து ஐதராபாத் அணியின் முதுகெலும்பாகவே அவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு தனியாளாக விளையாடிய ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையும் கைப்பற்றி கொடுத்தார்.

அதற்கு அடுத்த ஆண்டே கொல்கத்தா அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 59 பந்துகளில் 126 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணிக்காக முதல் சதத்தை அடித்தார். இந்த போட்டியில் 8 சீட்டர் மற்றும் 10 பவுண்டரிகள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியின் முடிவில் ஐதராபாத் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

ஏபி டிவிலியர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ்

தற்பொழுது ஐபிஎல் தொடர் பார்த்துக்கொண்டிருக்கும் நிறைய பேருக்கு ஏபி டிவில்லியர்ஸ் முதன்முதலில் டெல்லி அணிக்காக விளையாடினார் என்று சொன்னால் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள். ஆரம்ப காலகட்டத்தில் டெல்லி அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக முதலில் டெல்லி அணி பேட்டிங் ஆடியது. இதில் டிவில்லியர்ஸ் 54 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்றார். அந்த போட்டியில் 6 சிக்சர்மற்றும் 5 பவுண்டரிகள் அவர் அடித்திருந்தார். போட்டியின் முடிவில் சென்னை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

மணிஷ் பாண்டே – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

2009ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணியில் விளையாடிய மணிஷ் பாண்டே சதம் அடித்தார். அந்தப் போட்டியில் 73 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்றார். 4 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகள் அவர் அந்த போட்டியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சதம் காரணமாக பெங்களூரு அணி ஆட்ட முடிவில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது.

இதில் ஒரு வேடிக்கை விஷயம் என்னவென்றால் ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் மனிஷ் பாண்டே என்பதும் அதேசமயம் சதமடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட வீரரும் மனிஷ் பாண்டே தான்.