பினிஷராக தோனியின் காலம் முடிந்துவிட்டது ; இனி அவர் இந்த இடத்தில் ஆடினால் தான் சரியாக இருக்கும் – ரீட்டின்டர் சிங் சோதி வலியுறுத்தல்

0
68
Reetinder Singh Sodhi about MS Dhoni

சென்னை அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. 2020ஆம் ஆண்டு 200 ரன்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு 114 ரன்கள் என மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் 314 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.

30 போட்டிகளில் 314 எடுத்துள்ள தோனி ஒரு அரைசதம் கூட குவிக்கவில்லை. கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான முதல் தகுதி சுற்று போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தன்னுடைய அதிரடியை காட்டினார். அந்த போட்டியில் 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து பழைய தோனியை நம் கண்முன் காண்பித்தார்.

- Advertisement -

அந்த ஒரு போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளை ஒப்பிட்டு பார்த்தால் மகேந்திர சிங் தோனியின் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகிறது. எனவே இனி அவர் பேட்டிங் வரிசையில் வேறு இடத்தில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரீட்டிந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி சற்று மேல் வந்து விளையாட வேண்டும்

இது சம்பந்தமாக பேசி உள்ள அவர் மகேந்திர சிங் தோனி 10 அல்லது 11ஆவது ஓவரில் வந்து விளையாடும் போது தான் சரி. சற்று நேரம் எடுத்துக் கொண்டு அவர் தன்னுடைய பேட்டிங்கை இறுதி வரை எடுத்துச் செல்வார். இனி மகேந்திர சிங் தோனியும் முன்பு போல அதிரடியாக கடைசி நேரத்தில் கலந்து இறங்கி விளையாட முடியாது. எனவே அவர் பினிஷர்( கீழ் வரிசையில் இறங்கி விளையாடுவது) இடத்தில் விளையாடுவதை தவிர்த்து சற்று மேல் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் திறமை ஜடேஜாவுக்கு உள்ளது

அந்த அணியில் கடந்த ஆண்டு வரை மகேந்திர சிங் தோனியும் முக்கியமான வீரராக நம் அனைவராலும் அடையாளம் காணப்பட்டு வந்தார். ஆனால் தற்பொழுது இது ரவிந்திர ஜடேஜாவின் நேரம். பேட்டிங் பந்துவீச்சு மற்றும் பில்டிங் என அனைத்திலும் ஒரு கம்ப்லீட் கிரிக்கெட் வீரராக அவர் தன்னை உருமாற்றி இருக்கிறார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் கூட அவரது பேட்டிங் திறமை மிக அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இதே போல அதிரடியாக விளையாடினால் அவர் சென்னை அணியை கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. மகேந்திர சிங் தோனி மீது இருந்த கவனம் தற்போது ரவீந்திர ஜடேஜா மீது இருக்கும். சென்னை அணியை பொறுத்தவரையில் முக்கிய இரு வீரர்களாக இவர்கள் இருவரும் வைக்கப்படுவார்கள் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வருகிற மார்ச் 26ம் தேதி அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.