போட்டி நாளை ஒத்திவைப்பு… நாளையும் மழையால் ஆட்டம் தடைப்பட்டால் கோப்பை யாருக்கு செல்லும்?

0
2025

இரவு 11 மணியைத் தாண்டி மழை நிற்காமல் பெய்து வந்ததால், போட்டி ரிசர்வ் நாளுக்கு நாளை ஒத்திவைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்துவிட்டனர். நாளையும் மழையால் ஆட்டம் தடைபட்டால் கோப்பை யாருக்கு செல்லும்? என்கிற விவரங்களை பின்வருமாறு காண்போம்.

2023 ஐபிஎல் சீசன் பல்வேறு திருப்பும் முனைகளைக் கொண்டதாக அமைந்தது. லீக் போட்டிகளின் கடைசி நாள் கடைசி லீக் போட்டி கடைசி ஓவரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது பரபரப்பாக உறுதியானது.

- Advertisement -

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் ற்றும் சிஎஸ்கே அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் மோதியது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் அணியை வீழ்த்தியது சிஎஸ்கே. ஃபைனலுக்கும் முன்னேறியது.

எலிமினேட்டர் போட்டியில், புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் இதுவரை லக்னோ அணியை வீழ்த்திராத மும்பை இந்தியன்ஸ், முதல் முறையாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருமுறை கூட மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இவ்விரு அணிகளும் இரண்டாவது குவாலிபயரில் மோதின. இந்த வரலாற்றை மாற்றி முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்குள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

- Advertisement -

லீக் சுற்று, பிளே-ஆப் சுற்று இரண்டுமே பல திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் இன்று பைனலில் மோதுவதாக இருந்தது.

இரவு 7:30 மணிக்கு துவங்கவிருந்த ஆட்டம் தொடர்ந்து மழை பெய்ததால் தடைப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் பார்க்கும்பொழுது மழை நிற்காததால், போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 10.30 மணியளவில் மழை நிற்கவில்லை என்பதால், தலா 15 ஓவராக போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு நடுவர்கள் உள்ளே வந்து 11 மணிக்குள் மழை நிற்க வேண்டும். அப்போதுதான் அடித்த ஒருமணி நேரத்திற்குள் தண்ணீர் மற்றும் ஈரப்பதத்தை சரி செய்து போட்டியை கிட்டத்தட்ட 12 மணியளவில் துவங்க முடியும். ஏழு அல்லது எட்டு ஓவராக குறைக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் நடுவர்களால் கூறப்பட்டது.

11 மணியையும் தாண்டி மழை நிற்காமல் பெய்து வந்ததால் இறுதிப்போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வழக்கம்போல ஏழரை மணிக்கு போட்டி துவங்கும். ரிசர்வ் நாளிலும் மழை குறுக்கீடு காரணமாக கடைசி நேரம் வரை போட்டியை நடத்தமுடியாமல் போனால், புள்ளி பட்டியல் அடிப்படையில் சிஎஸ்கே அணியைவிட முன்னிலையில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.