உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது பெரும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை இழந்து இருக்கிறது.
பும்ரா அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இங்கிலாந்துக்கு எதிராக டி20, ஒருநாள் தொடர்
கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இந்திய அணி அடுத்தது எப்போது கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு வாரம் ஓய்வு எடுக்கப் போகிறது. அதன் பிறகு ஜனவரி மாதம் 22ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஜனவரி 22ஆம் தேதி முதல் டி20 போட்டியும், 25ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும், 28ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெற இருக்கிறது. நான்காவது டி20 போட்டி ஜனவரி 31ஆம் தேதியும், ஐந்தாவது டி20 பிப்ரவரி இரண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி பிப்ரவரி 6,பிப்ரவரி 9, பிப்ரவரி 12ஆம் தேதி விளையாடுகிறது .
சாம்பியன்ஸ் டிராபி 2025
இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக துபாய் செல்கிறது. அங்கு பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் விளையாடுகிறது. இந்த தொடர் மார்ச் 9ஆம் தேதி முடிவடைகிறது.
இதையும் படிங்க: 205 ரன்.. 67 ஆண்டுகளுக்குப் பிறகு.. சாதனை படைத்த பாக் அணி.. தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட்.. முழு விபரம்
அதன் பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும்.