இந்திய கிரிக்கெட்

பும்ரா என்கிட்ட இத செய்ய வேணானு சொன்னாரு.. அதுதான் ஆஸி டெஸ்ட்ல சிறப்பா செயல்பட காரணம் – முகமது சிராஜ் பேட்டி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது சிராஜ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் துணை கேப்டன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சிறப்பாக பந்து வீசிய சிராஜ்

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், பந்து வீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அணியின் கேப்டனாக செயல்பட்ட பும்ரா ஐந்து விக்கெட்டுகள் எடுத்த நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்கு பின்னர் இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில்முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் எவ்வாறு தன்னை ஊக்கப் படுத்தினார்கள் என்று சிராஜ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா என்னை ஊக்கப்படுத்தினார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்கல் என்னிடம் நீ ஒரு போர் வீரன், இந்திய அணிக்காக விக்கெட்டுகள் பெற்றுக் கொடுப்பீர்கள் ஆனால் உங்களது பந்துவீச்சை ரசித்துக் கொண்டே இருங்கள் என்று கூறினார். நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன்.முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட் எடுத்த பிறகு ஓட வேண்டாம், ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.

இதையும் படிங்க:சிஎஸ்கே என்ன எடுக்கல.. ஆனா எனக்காக இத செஞ்சது சந்தோஷமா இருந்துச்சு – தீபக் சஹார் பேட்டி

அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by