இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் அக்சர் படேல் கேப்டன்சி மிக அபாரமாக இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இந்த போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆடுகளும் கொஞ்சம் மெதுவாக இருந்தது பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தை கொடுப்பதாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி 13 பந்தில் 19 ரன்கள், தேவ்தத் படிக்கல் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அரை சதம் அடித்து 38 பந்தில் 63 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் ரஜத் பட்டிதார் உள்ளே வந்தார். உடனே டெல்லி கேப்டன் அக்சர் படேல் தானும் குல்தீப்பும் பந்து வீசுவதை நிறுத்தினார். அடுத்து உடனடியாக வேகப்பந்து வீச்சாளர்களை இரண்டு முனைக்கும் கொண்டு வந்தார். இதற்கு கைமேல் பலனாக ரஜத் பட்டிதார் 4 பந்தில் 8 ரன் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ஆடுகளம் எதுவாக இருப்பதால் டீம் டேவிட் களத்தில் இருந்த போது கூட 17வது ஓவரை வீச அக்சர் படேல் வந்தார். அவர் பந்தை மெதுவாக வெளியே தூக்கி போட்டு திருப்பினார். இதை அடிக்க சென்ற டேவிட் ஏமாந்து விக்கெட் இழந்தார். இதனால் தொடர்ந்து ஆர்சிபி விக்கெட் மளமளவென சரிந்தது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் கேட்ச் பார்த்த பின்னாடி.. நான் பீல்டிங்கின் தாத்தா ஆயிட்டேன்.. இது வேற லெவல் சம்பவம் – ஜான்டி ரோட்ஸ் பேச்சு
இதன் காரணமாக ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்கள் தாண்டி எடுக்கும் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அக்சர் படேல் கேப்டன்சி ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.