வீடியோ: “சிஎஸ்கே போட்டியில் கம்பியிருக்கு ஏற்பட்ட நிலைமை” ….. ஏன்யா ஒரு பெரிய மனுஷனுக்கு இப்படி செய்யலாமா !!!!

0
4504

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை ஏற்றி இருக்கிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது . இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி நடக்க இருக்கிறது .

இந்தப் போட்டி தொடரின் முதல் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டாம் பாதி போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன . ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து அணிகளுமே வெற்றிக்காக போராடி வருகின்றன.

- Advertisement -

நேற்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெற்றது . முதல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின . லக்னோவில் நேற்று பெய்த மழையால் போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது . முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியை 126 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறித்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

நேற்றைய போட்டியின் போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது . போட்டியின் போது மழை பெய்து கொண்டிருந்ததால் வீரர்களின் டக் அவுட்டில் இருந்து ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர் . அப்போது சில ரசிகர்கள் கௌதம் கம்பீரத்தை பார்த்து விராட் கோலியின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். விராட் கோலிக்கு தங்கள் ஆதரவு இருப்பதாகவும் குரல் எழுப்பினர் . இதனை சற்றும் எதிர்பார்க்காத கம்பீரம் மிகுந்த கோபத்துடன் சென்றார் . அது அவரது முகத்திலேயே தெரிந்தது .

லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின் போது விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது . இது தொடர்பாக இரண்டு வீரர்களுக்கும் மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்தது ஐபிஎல் நிர்வாகம் . கடந்த சில வருடங்களுக்கு முன்பு கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும்போது விராட் கோலி மற்றும் கம்பீர் இடையேயான மோதல் தொடங்கியது .

- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற்றார் . கடந்த ஆண்டு முதல் அவர் லக்னோ அணிக்காக ஆலோசகராக பணியாற்றி வருகிறார் . விராட் கோலியின் பெயரைச் சொல்லி கௌதம் கம்பீரை ரசிகர்கள் கிண்டல் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது . அந்த வீடியோவானது இந்தப் பதிவின் இறுதியிலும் இணைக்கப்பட்டு இருக்கிறது .