ஒரே போட்டியில் தோனியா இத்தனை தவறுகள் செய்தது.. பட்டியலை பார்த்து மிரளும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?

0
1081
Dhoni

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் ஆன்ஃபீல்ட் குறித்து மற்ற அணிகளின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் அணித் தேர்வு ஆரம்பித்து பில்டிங் செட்டப் வரையில் தோனி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகவும் சாதாரணமான முறையில் தவறுகள் செய்ததை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக அமைந்திருக்கிறது. பொதுவாக கேப்டன்சிக்காகவே பலராலும் விரும்பப்படக்கூடிய தோனி இப்படி செய்தது சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

தோனியின் ஆரம்ப தவறுகள்

இந்த போட்டியில் விஜய் சங்கர் அணியில் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தார். மேலும் ஏழு பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு மட்டுமே கூடுதலாக விஜய் சங்கர் இடத்திற்கு ஆரம்பத்திலேயே ஒரு பந்துவீச்சாளர் எடுத்துச் சென்றிருக்கலாம். இல்லையென்றால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றால் இளம் வீரர் வன்ஸ் பேடியை களம் இறக்கி இருக்கலாம். விஜய் சங்கர் செய்வதை அவரால் செய்திருக்க முடியும்.

அடுத்து மிக முக்கியமாக இரண்டாவது வேகபந்துவீச்சாளர் பவர் பிளேவில் இல்லாமல்தான் சிஎஸ்கே மிகவும் சிரமப்பட்டு வந்தது. இதன் காரணமாகத்தான் முதலில் முகேஷ் சவுத்ரி, அடுத்து அன்சூல் காம்போஜ் கொண்டுவரப்பட்டார்கள். இப்படி இருந்த நிலையில் இன்று இம்பேக்ட் பிளேயராக அன்சூல் காம்போஜை கொண்டு வராமல் தோனி அஸ்வினை கொண்டு வந்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

- Advertisement -

தோனியின் பெரிய தவறுகள்

இதற்கு அடுத்து சுழல் பந்துவீச்சில் பவர் பிளேவில் அஸ்வின் குறிப்பிடும்படி சிறப்பாகவே இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஐந்தாவது ஓவருக்கு ஜேமி ஓவர்டன்னை கொண்டு வந்து ரன்களை வாரி வழங்கினார். சுழல் பந்துக்கு சாதகம் இருந்த காரணத்தினால் நூர் அகமதுவை வீச வைத்திருக்கலாம். இல்லையென்றால் பத்திரனாவை ஒரு ஓவருக்கு கொண்டு வந்து பார்த்திருக்கலாம்.

இதையும் படிங்க : சேப்பாக் தோல்விக்கு திருப்பி கொடுத்த மும்பை.. 15.4 ஓவரில் 177 ரன்.. ரோஹித் சூர்யா வேற லெவல் பேட்டிங்.. 9 விக்கெட்டில் சிஎஸ்கேவை நசுக்கியது

மேலும் சிஎஸ்கே அணியின் ஸ்டிரைக் பவுலர்களாக இருக்கும் நூர் அகமத் 9வது ஓவரில் வந்தார். பத்திரனாவோ 13 வது ஓவரில் தான் வந்தார். ஏறக்குறைய இவர்கள் வருவதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியை தங்கள் பக்கமாக எடுத்துச் சென்று விட்டார்கள். இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் விளையாடியதற்கு தகுந்தபடி பீல்ட் செட்டிங் செய்ய தோனி தவறிவிட்டார். இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே போட்டியில் தோனி இத்தனை தவறுகள் செய்தது இதுதான் முதல் முறை. இதை சிஎஸ்கே அணி ரசிகர்களே விமர்சனம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -