சிஎஸ்கேவுக்கு தோனி ஆட வேண்டியதே இல்லை.. கெத்தான 12 வீரர்கள்.. வேற லெவல் பிளேயிங் XI.. முழு அலசல்

0
2
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் மகேந்திர சிங் தோனி இல்லாமலேயே மிகவும் வலிமையாக காணப்படுகிறது. இது குறித்த முழு அலசலை பார்க்கலாம்.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரத்திற்கு கால் தசைப்பிடிப்பு காரணமாக மகேந்திர சிங் தோனி விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வலிமையான பேட்டிங் யூனிட்

இந்த முறை சிஎஸ்கேவுக்கு வலிமையான பேட்டிங் யூனிட் கிடைத்திருக்கிறது. துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மூன்றாவது இடம் இப்போதைக்கு ஆயுஸ் மத்ரேவுக்கு கொடுக்கப்படும்.

இதைத்தொடர்ந்து அடுத்த மூன்று இடங்களுக்கு சிவம் துபே, டிவால்ட் ப்ரீவிஸ் மற்றும் கார்த்திக் சர்மா மூன்று பேரும் இடம்பெறுவார்கள். இந்த வகையில் பேட்டிங் யூனிட்டில் முதல் ஆறு இடங்களில் அதிரடி வீரர்கள் இடம் பெறுகிறார்கள்.

- Advertisement -

வலிமையான பவுலிங் யூனிட்

இதற்கு அடுத்து பவுலிங் யூனிட்டில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பும் ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் இடம்பெறுகிறார். அடுத்து வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர் டன் வருகிறார். மேலும் பிரதான சூழல் பந்துவீச்சாளர் நூர் அகமது, பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் மேட் ஹென்றி மற்றும் கலீல் அகமது முதல் 11 இடங்களில் வருகிறார்கள். இம்பேக்ட் பிளேயராக அன்சூல் காம்போஜ் விளையாடலாம்.

இந்த பேட்டிங் யூனிட்டில் ஜேமி ஓவர் டன் வரையில் முதல் 8 வரை பேட்டிங் நீளம் இருக்கிறது. மேலும் நூர் அகமது மற்றும் அன்சூல் காம்போஜ் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்வார்கள். இதற்கு அடுத்து பவுலிங் யூனிட்டில் ஸ்பின்னர்களாக நூர் அகமது, பிரசாந்த் வீர், பகுதி நேர ஆப் ஸ்பின்னர் ஆயுஸ் மத்ரே ஆகியோரும், பாஸ்ட் பவுலர்கள்ளாக மேட் ஹென்றி, கலில் அகமது, அன்சூல் காம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் என மொத்தம் ஏழு பவுலர்கள் வருவார்கள்.

இதையும் படிங்க: SRH 400 ரன் அடிச்சாலும் கடவுள் கூட காப்பாத்த முடியாது.. உனன்கட் ஹர்ஷல் படேலாம் பவுலரா? – ஸ்ரீகாந்த் விமர்சனம்

சாத்தியமான CSK XII: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கே), ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், மாட் ஹென்றி, நூர் அகமது, கலீல் அகமது மற்றும் அன்ஷுல் காம்போஜ்.

- Advertisement -