சன்ரைசர்ஸ் 200 இல்ல.. எவ்வளவு ஸ்கோர் எடுத்தாலும் அவங்களுக்கு பத்தாது.. பெரிய சிக்கலில் இப்போ மாட்டிக்கிட்டாங்க – ரவிச்சந்திரன் அஸ்வின்

0
41

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் முதலாவது ஆட்டத்தில் பெங்களூர் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த சூழ்நிலையில் ஹைதராபாத் அணியின் பலவீனம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

19 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அதில் கேப்டன் இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர துவக்க ஜோடியான அபிஷேக்சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் கூட்டணி 7 மற்றும் 11 ரன்னில் வெளியேறினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி, எந்தவித சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹைதராபாத் அணி குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு பவர் பிளேக்கள் இழந்தது. சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே முதலில் பேட்டிங் செய்வது நல்ல விஷயமாகும். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் அபிஷேக் மற்றும் டிராவிஸ் கூட்டணி விக்கட்டை சரியாக கணிக்காமல் விளையாடியது. அதன் விளைவு தான் சன்ரைசர்ஸ் அணியால் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் போனது. சின்னசாமி ஆடுகளத்தை பொறுத்தவரை முதலில் சற்று ஈரப்பதம் இருப்பதால் பந்து கொஞ்சம் அசையும்.

இதை அவர்கள் கணித்திருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சற்று பொறுமையாக விளையாடியிருந்தால் பவர் பிளே முடிவிற்குள் 50 ரன்னில் ஒரு விக்கெட் இன்று இருந்திருந்தால் கூட அவர்களால் பெரிய ஸ்கோர்க்கு சென்று இருக்க முடியும். ஆனால் சன்ரைசர்ஸ் அணி எவ்வளவு ரன்கள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இருக்காது என்று நினைக்கிறேன். அந்த அணியின் பவர் பிளே பண்ணு வீச்சு மிகவும் பலவீனமாக இருப்பது போல தோன்றுகிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -