ஹர்திக் பாண்டியா செஞ்ச மெகா தப்பு.. போட்டி மாறிய தருணம்.. பொளக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

0
2601
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் முதலில் பேட்டிங் செய்து எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இந்த அணி முதலில் பேட்டிங் செய்து இருநூறு ரன்கள் எடுத்த ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பதால், நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிகள் நுழையும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

ஆடுகளத்தின் தன்மை

நேற்றைய போட்டி மழையின் காரணமாக 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆடுகளத்தில் டென்னிஸ் பால் பவுன்ஸ் காணப்பட்டது. மெதுவாக வீசப்படும் பவுன்சர்கள் மிகவும் தாக்கத்தை தரக்கூடியதாக அமைந்தது. இதைத்தொடர்ந்து முதலில் பந்து வீசிய பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது பந்து வீச வந்த பொழுது ஹர்திக் பாண்டியாவும் இதே முறையில் பந்து வீசி ஜோஸ் இங்கிலீஷ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீசியை இரண்டாவது ஓவரில் நெகேல் வதேரா விக்கெட்டுக்கு இதே போன்ற ஒரு பந்தை வீசி கேட்ச் வாய்ப்பை உருவாக்கினார். மேலும் இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்திருந்தார்.

- Advertisement -

ஹர்திக் செய்த மெகா தப்பு

நேற்று எல்லா விதத்திலும் தான் நான்கு ஓவர்கள் வீசுவதற்கு வாய்ப்புகள் இருந்த நிலையில், அஸ்வினி குமார் மற்றும் பும்ரா அடுத்தடுத்து இரண்டு நல்ல ஓவர்கள் வீசி இருந்த நிலையில், தொடர்ந்து அஸ்வினி குமார் அல்லது தானே வந்து பந்து வீச வேண்டிய சூழ்நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா ரீஸ் டாப்லியை பந்து வீச வைத்தார். அந்த ஓவரில் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 3 சிக்ஸர்கள் அடித்தார். ஓவருக்கு 9 ரன் எடுத்த பஞ்சாப் அதை 10 ரன்னாக மாற்றிய தருணம் அதுதான். அதற்கு மேல் பஞ்சாப் அணியை யாராலும் தடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க : 308 ரன்.. 2 க்கு 2.. ஜோ ரூட் அதிகபட்ச ரன் சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் பரிதாப சரிவு.. இங்கிலாந்து வெற்றி

மேலும் இதற்கு பிறகும் ஹர்திக் பாண்டியா நேற்று தனக்கு இருந்த இரண்டு ஓவர்களில் ஒரு ஓவர் கூட வீச வரவில்லை. டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வைத்து தான் இந்திய அணியின் பக்கம் போட்டி வர முக்கிய காரணமாக இருந்தது. மேலும் நேற்றைய ஆடுகளம் அவரது மெதுவானம் பவுன்சர் பந்து வீச்சுக்கு சரியானதாகவும் இருந்தது. இப்படி இருந்தும் ஹர்திக் பாண்டியா பந்து வீசாததும் தவறான பந்துவீச்சாளரை பயன்படுத்தியதும் பஞ்சாப் வெல்வதற்கு ஒரு காரணமாக இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவை சொந்த அணியின் ரசிகர்களே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -