நேற்று இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தற்போது ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அசத்திய வெஸ்ட் இண்டீஸ்
முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் உடன் 59 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாய் ஹோப் 66 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மேலும் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த கேசி கார்தி சிறப்பாக விளையாடி சதம் அடித்து 105 பந்துகளில் 13 பவுண்டரிகள் உடன் 103 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 350 ரன்கள் தாண்டி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சரிந்து 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆதில் ரஷீத் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
ஜோ ரூட் அபாரம்
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேமி அனைத்து மற்றும் பென் டெக்கேட் இருவரும் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி இரண்டு ரன்கள் எடுத்து இரண்டு விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
இதைத் தொடர்ந்து ஜோ ரூட்டுக்கு ஒரு பக்கத்தில் கேப்டன் ஹாரி புரூக் 36 பந்துகளில் 47 ரன்கள், வில் ஜேக்ஸ் 58 பந்தில் 49 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்தது மட்டுமில்லாமல் 139 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 166 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணியை 48.5 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் எனக்கு போட்ட ஆர்டர் இதுதான்.. ஆனா மும்பை எனக்கு நல்லா தெரியும் – நெகேல் வதேரா பேட்டி
மேலும் ஜோ ரூட்டுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் இது அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியது. இத்துடன் ஜோ ரூட் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் கடந்து சாதனை படைத்தார்.






