விராட் கோலியை விட பாப் டு பிளசிஸ் சிறந்த கேப்டனாக விளங்கினார் – சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடிப் பேச்சு

0
55
Sanjay Manjarekar about Virat Kohli and Faf du Plessis

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரமான பாப் டூ பிளெசிஸ் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழி நடத்தினார். அவரது தலைமையின் கீழ் பெங்களூர் சிறப்பாக செயல்பட்டு குவாலிபயர் 2 வரை சென்றது. சென்ற ஆண்டு ஐபிஎல் 2ஆம் பாதி துவங்கிய தினத்தன்று விராட் கோலி 2021ஆம் ஆண்டுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய கேப்டனுக்கான தேடலுடன் ஆர்.சி.பி அணி ஏலத்திற்கு வந்தது. 2021ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டூ பிளெசிஸை எளிதாக வாங்கி கேப்டன் பொறுப்பை கொடுத்தது.

ஏற்கனவே அவருக்கு சர்வதேச அளவில் கேப்டன் செய்த அனுபவம் இருப்பதால் எந்த வித பயமும் நிர்வாகத்திற்க்கு வரவில்லை. தனக்கு கொடுத்த பொறுப்பை நன்றாக செய்தார் டூ பிளெசிஸ். அவரின் கேப்டன்சி குறித்தும் பெங்களூர் அணியின் ஆட்டம் குறித்தும் சஞ்சய் மஞ்சரேக்கர் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அவர், “ விராட் கோலியை விட பாப் டூ பிளெசிஸ் சிறந்த கேப்டனாக விளங்கினார். இருப்பினும் அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு வழங்கிய பாராட்டுகளில் பாதி கேப்டன் டூ பிளெசிஸ்க்கு சேர வேண்டும். தொடரின் துவக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தவர், போகப் போக மற்ற வீரர்களைப் போல சுமாராக ஆடி முடித்தார். என்னைப் பொறுத்தவரை, பாப் டூ பிளெசிஸ் தான் அடுத்த ஆண்டும் பெங்களூர் அணியை தலைமை தாங்க வேண்டும் ” என்றார்.

மேலும், “ குவாலிபயர் 2 வரை வந்த அணி நிச்சயம் கோப்பையை முத்த்மிட்டிருக்க வேண்டும். தங்க பதக்கம் வெல்ல வேண்டிய அணி வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது. எங்கு தவறினார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதை அடுத்து வரும் காலங்களில் சரி செய்வது நல்லது. ” என்றார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

இந்த வருடம் விராட் கோலி மற்றும் சிராஜ் சிறப்பான பார்மில் இல்லை. அவர்கள் இருவரும் தங்களது பாதைக்கு திரும்பினால் பெங்களூர் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். இந்த ஆண்டு ரஜத் பட்டிதர், அனுஜ் ராவத் மற்றும் ஷாபாஷ் அகமத் ஆகிய இளம் வீரர்கள் தங்கள்து திறனை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்து. அவரின் பங்களிப்போடு பெங்களூர் அணி அடுத்த ஆண்டு வலிமையாக திரும்பும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -