“நடக்கிறது எல்லாம் என்னைவிட என் குடும்பத்தைதான் அதிகம் பாதிக்குது” – அஷ்வின் உருக்கமான பேச்சு!

0
431
Ashwin

நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் அது களத்திற்கு உள்ளே நடந்தது கிடையாது களத்திற்கு வெளியே நடந்தது.

அது என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளரான இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினை வெளியில் வைத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட முடிவு செய்ததுதான்!

- Advertisement -

போட்டி துவங்குவதற்கு முன்பே சச்சின் அஸ்வினை அணிக்குள் வைப்பதற்கான காரணங்களை எல்லாம் விளக்கி இருந்தார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை என்றாலும் அஸ்வினை அணியில் எடுக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்திய அணி நிர்வாகம் போட்டிக்கு முன்பாக பச்சை ஆன ஆடுகளத்தைப் பார்த்ததும் அஸ்வினை கைவிட்டு நான்காவது வேகப்பந்துவீச்சாளரை எடுத்துக் கொண்டது.

இரண்டு வருடம் கடுமையாக உழைத்து இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கிய அஸ்வின், கடைசி நேரத்தில் அந்த இறுதிப் போட்டியில் விளையாட முடியாதது மிகப்பெரிய மனவலியை அவருக்கு உருவாக்கி இருக்கும்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோற்றதும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து தெரிவித்தும் இந்திய அணி மற்றும் துணை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அஸ்வின் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார்.

தற்போது இதற்கான காரணத்தை வெளியிட்ட அவர் கூறும் பொழுது
“அந்த நேரம் இறுதிப்போட்டியில் தோற்ற பிறகு அதிலிருந்து வெளியில் வருவது அவசியமாக இருந்தது. அதை அப்படியே மூடிவிட முடிவு செய்தேன். நான் அப்போதுதான் அதை விட்டு மேலும் முன்னேறி வர முடியும். அதற்குள்ளேயே என்னால் சுற்றிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு எனக்கு நேரமில்லை நான் இப்போது வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

நான் இதைப் பார்க்கும் பொழுது என் குடும்பத்தில் ஏற்படும் அதிர்ச்சிகளின் அளவு நம்ப முடியாதது. என் தந்தைக்கு இதய பிரச்சினை மற்றும் பிரச்சனைகள் உடல்ரீதியாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது நடக்கும் பொழுது அவர் என்னை அழைத்து என்ன ஏதென்று விசாரிப்பார்.

அவர் மன அழுத்தத்தில் இருப்பார். நான் வெளியில் சென்று விளையாடுவது மிகவும் எளிதான விஷயம். ஏனென்றால் அது இன்னும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. என் தந்தைக்கு அப்படி கிடையாது. அவர் நான் செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செய்து கொள்கிறார். எனவே இதை எல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது!” என்று கூறியுள்ளார்!