“ஆஸ்திரேலியாவ எல்லாரும் குறைவா எடை போட்டாங்க.. ஆனா நாங்க..!” – பிரட் லீ அதிரடி பேட்டி!

0
1375
Lee

இந்தியாவில் நடைபெற்ற 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அபாரமான முறையில் விளையாடி ஆஸ்திரேலியா அணி வென்றது.

இந்த உலகக் கோப்பை தொடரில் உள்நாட்டில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்த காரணத்தினால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வது முடியாத காரியம் என்பதாக கணிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் எல்லோரும் கணிப்பையும் பொய்யாக்கி இறுதிப் போட்டிகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகச் சாம்பியன் ஆகியிருக்கிறது.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ கூறும்போது “எல்லோரும் இந்தியாவை உற்று நோக்கி இருந்தோம். இந்தியா எப்படியும் வென்று விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியா எந்த இடத்திலும் தனது மனபலத்தை இழந்து விடாமல் கடைசிவரை நின்று போராடியது

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பேட் கம்மின்ஸ் பங்களிப்பை அளவிட முடியாது ஏனென்றால் முதல் இரு போட்டிகளில் மிக மோசமாகத் தோல்வியை தழுவிய போதும், வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார்

- Advertisement -

இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து ஒன்ற லட்சம் மக்களுக்கு முன்பு வீழ்த்துவது என்பது எளிதான ஒன்று அல்ல பேட் கம்மின்ஸ் அதை செய்து காட்டினார்

ஆஸ்திரேலிய வீரர்கள் நாங்கள் எப்பொழுதும் உலக கோப்பையில் சாம்பியன் அணி என்று என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் ஆறாவது முறையாக உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எனது வாழ்த்துக்கள்!” என்று கூறியிருக்கிறார்!

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி மேலும் இந்தியாவில் தங்கி இருந்து வருகின்ற 23ஆம் தேதி முதல் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் இருநாட்டு நட்சத்திர வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது!