ரோகித் விராட் கூட இந்த இந்திய பந்துவீச்சாளரை விளையாட விரும்புவதில்லை- தினேஷ் கார்த்திக் ருசிகர தகவல்!

0
2379
DK

இந்திய கிரிக்கெட் அணி, நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் அசத்தலான வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

சுழற் பந்து வீச்சுக்கு பெரிய சாதகத்தை தரக்கூடிய இந்திய ஆடுகளத்தில், முட்டிக்கு மேல் பந்து எழும்பாத நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் சமி துவக்க விக்கெட்டுகள் இரண்டையும் அபாரமாக வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை தந்தார்கள்.

- Advertisement -

இதில் முகமது சிராஜ் ஸ்விங்கை பயன்படுத்த , முகமது சமி ஆடுகளம் மற்றும் தன்னுடைய அப் ரைட் சீம் இரண்டையும் பயன்படுத்தி வார்னரை அற்புதமாக கிளீன் போல்ட் செய்து அனுப்பினார். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு மிகமிக சிறப்பாக இருந்து வருகிறது.

தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முகமது சமி பற்றி பேசிய போது ” சமிக்கு ஒரு வார்த்தையை பயன்படுத்துவதாக இருந்தால் டார்ச்சர் சமி என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் என் வாழ்க்கை முழுவதிலும் நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்துவீச்சாளர் அவர் மட்டும்தான். அவர் என்னை ஆட்டத்திலும் இரண்டு முறை வெளியேற்றி இருக்கிறார். இவரை விளையாடுவது எனக்கு மட்டும்தான் கஷ்டமாக இருக்கிறது என்று நான் நினைத்தேன். அதனால் விராட் கோலி ரோஹித் சர்மாவிடம் இவரது பந்துவீச்சை சந்திப்பது குறித்து கேட்டேன். அவர்கள் இருவருமே சமியை எதிர்த்து விளையாடுவதை வெறுப்பதாக கூறினார்கள்” என்று ஆச்சரியப்படத்தக்க தகவலை கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“அவரது தனித்தன்மையான பந்து வீச்சுக்கு அவரது அப் ரைட் சீம் உதவுகிறது. ஒரு வேகப்பந்துவீச்சாளரை எடுத்துக் கொண்டால் அவர் பந்தை வீசும் பொழுது ரிவ்ஸ் 1000 ஆர்பிஎம்-க்கு இருக்கும். ஆனால் அது முகமது சமிக்கு 1500-1600 இருக்கிறது. இந்த அளவுக்கு பேக் ஸ்பின் இருக்கும் பொழுது, விக்கெட் கொஞ்சம் நன்றாக இருந்தால் கூட, அந்தப் பந்துவீச்சாளரை எதிர்த்து விளையாடுவது மிக மிக கடினமான காரியம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -