சிஎஸ்கே கூட ஆடுனத விட பாப்- மேக்ஸி இன்னைக்கு ஆடுனதுதான் செம ஆட்டம்; ஜோஸ் வந்ததும் நாங்க வேற மாதிரி மாறிடுவோம் – விராட் கோலி!

0
963
Viratkohli

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று 32 வது போட்டியாக பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் வென்றது!

டாசை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய வைக்க, அந்த அணிக்கு பாப் 62, மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் வந்தது.

- Advertisement -

இதை அடுத்து தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, முறையே 47, 52 ரன்கள் எடுத்த தந்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்துகளில் அஸ்வின் 10 ரன்கள் எடுத்து நான்காவது பந்தில் ஆட்டம் இழக்க, பரபரப்பான இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்சல் படேல் சிறப்பாக பந்து வீசி 32 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு இரண்டாவது பகுதியில் முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்த போட்டியில் கேப்டனாக பணியாற்றிய விராட் கோலி பேசுகையில்
” உண்மையைச் சொல்வதென்றால் நாங்கள் டாஸ் போது விவாதித்தோம். ஆடுகளம் மிகவும் வறட்சியாக காணப்பட்டது. மின்விளக்குகளின் கீழ் கடைசி பத்து ஓவர்கள் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். இது மிகவும் கடினமானது. இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் காரணமாக ஆட்டங்கள் மிகவும் நெருக்கமாக செல்கின்றன. சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட பாப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சென்னை உடனான போட்டியில் விக்கெட் நன்றாக இருந்தது. மேக்ஸ்வெல் விளையாடிய நான்கு ஓவர்களிலேயே ஆட்டத்தை திருப்பி விட்டார். 160 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்த விதத்தில் 190 ரன்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது !” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய விராட் கோலி
” முகமது சிராஜ் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அவர் புதிய பந்துடன் நல்ல நோக்கத்தை காட்டுகிறார். அவர் பர்பில் தொப்பியை வைத்திருப்பதற்கான காரணத்தைக் காட்டியுள்ளார். அடுத்த ஆட்டத்தில் ஜோஸ் ஹேசில்வுட் வருவார் என்று நம்புகிறேன். அவர் எப்பொழுதும் கடினமான ஓவர்களை வீசுவார். சின்னசாமி மைதானத்தில் பந்து வீசுவது எளிதல்ல. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தை போலவே இன்றும் சிராஜ் ஆட்டத்தை முடித்து விட்டார். ஜோஸ் வரும்பொழுது நாங்கள் வித்தியாசமான தாக்குதலை கொண்ட அணியாக மாறிவிடுவோம்! என்று கூறியிருக்கிறார்!