தற்போது இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியில் உள் குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், இத்தோடு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை வைத்து வெளிவந்த ஒரு செய்தியை அவர் முற்றிலும் மறுத்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை என இரண்டு உலகக் கோப்பைகளை அடுத்தடுத்து இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இந்த இரண்டு அணிகளுக்கும் தற்போதைய பயிற்சியாளரான மேத்யூ மோட் இருந்து வந்தார்.
அதே சமயத்தில் இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்று முதல் சுற்றோடு வெளியேறியது.
அந்த உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக பல முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் இருக்கும் என கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதியில் தோற்று வெளியேறியது. இரண்டு வடிவிலும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனது. இதன் காரணமாக தற்போதைய தலைமை பயிற்சிளர் மேத்யூ ரிமோட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்டிலர் பதவிகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயான் மோர்கன் அடுத்து பயிற்சியாளராக வரவேற்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து இயான் மோர்கன் பேசும் பொழுது “இந்தச் செய்தி உங்களைப் போலவே எனக்கும் ஒரு செய்திதான். ஒரு பயிற்சியாளர் குறித்து இப்படியான செய்திகள் நல்லது கிடையாது. இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் பற்றி பல செய்திகள் யூகங்களாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் என்ன நடக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க : நான் அடுத்த கேப்டனா பார்த்தது இவரைத்தான்.. கிரவுண்ட்ல ஒரு கேப்டனாவே இருந்தாரு – இந்திய முன்னாள் பவுலிங் கோச் பேட்டி
எனக்கும் பயிற்சியாளராக வருவதற்கு விருப்பம் இருக்கிறது. அதே சமயத்தில் எனக்கு ஒரு இளம் குடும்பம் இருக்கிறது. நான் அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டாக வேண்டும். இப்போதைக்கு நான் வீட்டிலிருந்தபடி பொறுப்புகளை கவனித்துக் கொண்டு கிரிக்கெட்டை பார்க்கத்தான் முடியும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.